என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறுமிளகு
கோத்தகிரியில் குறுமிளகு விளைச்சல் அதிகரிப்பு
குறுமிளகை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஊட்டி:
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர் மட்டம், கடசோலை, குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு தங்கம் எனப்படும் குறுமிளகு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறு மிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த குறுமிளகு செடிகளை அங்கு சைபர் மரம், பலாமரம் போன்ற மரங்களில் கொடிகளாக ஏற்றிவிட்டு இதனை வளர்த்து வருவார்கள்.
இதனை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கி செல்கிறார்கள். குறுமிளகை பச்சையாக எடுக்கும் போது கிலோ ரூ.400க்கும், காய வைத்து பதப்படுத்தும் போது கிலோ ரூ.600க்கும் விற்பனையாகி வருகிறது.
Next Story






