என் மலர்
நீலகிரி
ஊட்டியின் 200-வது ஆண்டை முன்னிட்டு, மே 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சலிவன் உருவ சிலையை திறந்துவைக்கிறார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்துக்கு நாளை (19-ந் தேதி) வருகை தர உள்ளாா்.
இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நீலகிரி-கோவை மாவட்ட எல்லையான பா்லியாறு பகுதியில் நீலகிரி மாவட்ட தி.மு.க. சாா்பில் அளிக்கப்படும் வரவேற்பில் தி.மு.க. துணை பொதுச் செயலாளா் ஆ.ராசா, மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் தலைமையில் குன்னூா் ஒன்றியம், உலிக்கல் பேரூராட்சி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொள்வா்.
மாலை 4 மணிக்கு குன்னூா் ெரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் அளிக்கப்படும் வரவேற்பில் குன்னூா் நகரம், கோத்தகிரி ஒன்றியம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் மற்றும் மேலூா் ஒன்றிய பகுதிகளுக்கு உள்பட்ட கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
மாலை 5 மணிக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலும் அளிக்கப்படும் வரவேற்பில் ஊட்டி நகரம், ஊட்டி வடக்கு, ஊட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளுக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனா்.
நீலகிரி மாவட்ட பாரம்பரிய முறைப்படி முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சியை 20-ந் தேதி காலை 10 மணியளவில் திறந்துவைக்க உள்ளாா்.
ஊட்டியின் 200-வது ஆண்டை முன்னிட்டு, மே 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சலிவன் உருவ சிலையை திறந்துவைத்தும், 11 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறாா்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கேரட் அழுகி, அடிபட்டு சரியான விளைச்சல் கிடைக்காததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது அங்கு நல்ல மழை பெய்து வருவதால் கேரட் மற்றும் காய்கறி பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கேரட் அழுகி, அடிபட்டு சரியான விளைச்சல் கிடைக்காததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பராமரிப்பு செலவுக்கு கூட பணம் மிஞ்சவில்லை என வேதனை தெரிவித்தனர்.
சுற்று சூழல் பாதுகாப்பினை உறுதிபடுத்த மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அரவேணு:
கோத்தகிரியில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்கவும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவுறுத்தல் படியும்ஜக்கனாரை ஊராட்சி மன்றம் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பினை உறுதிபடுத்த மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் சுகாதார சீர்க்கேடு முற்றிலும் தடை செய்யப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உட்கொள்வதால் இறப்பு மற்றும் ஏற்படும் தீங்கை தடுக்க முடியும்.
மீண்டும் மஞ்சள் பை திட்டம் மூலம் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு தாங்களாகவே முன்வந்து அவர்களுக்கு மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது.
இதை முன்னின்று ஜக்கனாரை ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் தொடங்கி வைத்தார், துணைத்தலைவர் ஜெயந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்று நடத்தினார்கள்.நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
ஊட்டியில் மழை பெய்து வருவதால் மலர் கண்காட்சிக்கு தயாரான மலர்களை பாலித்தீன் கவர்களை கொண்டு மூடி ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழையும் பெய்தது. இந்த கனமழை காரணமாக கடும் மேகமூட்டமும் காணப்படுகிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மழையால் பல இடங்களில் காய்கறி பயிர்கள் அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மலர் கண்காட்சிக்காக கடந்த ஒரு மாத காலமாகவே பல வண்ண மலர்களை தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பல வண்ண மலர்களும் மழையில் நனைகின்றன. மலர்கள் மழையில் நனையாமல் இருக்க தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பூங்காவில் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களையும் பாலித்தீன் கவர்களை கொண்டு போர்த்தி பாதுகாத்து வருகிறார்கள். இந்த பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக பல்வேறு வண்ண மலர்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.
தற்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால் மலர் கண்காட்சிக்கு தயாரான மலர்களை பாலித்தீன் கவர்களை கொண்டு மூடி பாதுகாத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் தாசன்(21). இவரது சகோதரர் கார்த்திக் ராஜா(வயது19). 2 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
சகோதரர்கள் 2 பேரும் நேற்று அருகே உள்ள கடசோலை கிராமத்தில் வசிக்கும் தங்களது அத்தை வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தங்களது மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கடசோலை சென்றனர். அங்கு உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் கரிக்கையூர் நோக்கி வந்தனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திக் ராஜா ஓட்டினார். பின்னால் தாசன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் நஞ்சப்கவுடர் வளைவு என்னும் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதில் தாசன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். கார்த்திக் ராஜா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, கார்த்திக் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இறந்த தாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதேபோல், பொன்னானி, சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி:
தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் காலை முதல் நள்ளிரவு வரை, ஊட்டி நகரம், தலைக்குந்தா, லவ்டேல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும், புறநகா் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் மக்கள் பாதிப்படைந்தனர். மேலும் ஊட்டி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை உள்பட அனைத்து முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.
2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால், சுற்றுலா தலங்களில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளை நோக்கி படையெடுத்தனர்.
கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அடிக்கடி மிதமான வெயில் நிலவியது.
மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் கருமேகங்களும் சூழ்ந்திருந்ததால், அந்த பகுதியே இருளாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

இந்த மழைக்கு கூடலூர் தோட்டமூலா பகுதியில் உள்ள சுமாா் 15 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் சூழந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தாலேயே மழை வெள்ளம் சூழ்ந்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூரில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையிலும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
பந்தலூர் மற்றும் மேங்கோ ரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள குழிகள் அனைத்தும் நிரம்பி குளம் போல காட்சியளித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து, அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.
சேரம்பாடி அருகே உள்ள நெல்லி குன்னுவில் பெய்த மழைக்கு சாமிநாதன் என்பவரின் வீட்டின் பின்புறம் திடீரென மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது விழுந்தது.
அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று காலையும் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சாரல் மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. தொடர்ந்து சாரல் மழையும், குளிரும் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன 15 அடி உயரம் கொண்ட மர வீடு அமைக்கப்பட்டு இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கடந்த 7-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
நேற்றுமுன்தினம் ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன 15 அடி உயரம் கொண்ட மர வீடு அமைக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் மோட்டு பட்லு, மான், பியானோ, பூட்டு, படகு, பனிமனிதன் போன்ற வடிவங்களும் தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகியவை ரோஜா மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. தொடக்க நாளிலேயே ரோஜா கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
அவர்கள் ரோஜா மலர்களை பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மலர்களால் ஆன வடிவங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாளில் குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் ரோஜா கண்காட்சியை பார்வையிட்டனர்.
நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் ரோஜா கண்காட்சியில் குவிந்தனர். நேற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். 2 நாட்கள் நடந்த ரோஜா கண்காட்சியை சுமார் 30 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.
நேற்று மாலை நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறந்த பூங்கா பராமரிப்புக்கு 22 கேடயங்களும், சிறந்த அரங்குகளுக்கு 44 கேடயங்களும், காட்சி ப்படுத்தப்பட்ட அரங்குகள் மற்றும் சிறப்பு பரிசுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 43 கேடயங்களும் என மொத்தம் 109 கேடயங்கள் வழங்கப்பட்டன. குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளி மூன்று கோப்பைகளை வென்றது.
நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வன பகுதியிலும், விளை நிலங்களிலும் சிலா் வீசி வருகின்றனா்.
வன பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மதுபானங்களின் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து, ரூ.10-தை வாடிக்கையாளா்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேலும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் திட்டமும் தொடங்கியது. இதற்கிடையே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறியதாவது:-
ஸ்டிக்கருடன் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் அளித்து ரூ.10 வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.