என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    நீலகிரிக்கு நாளை வரும் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு

    ஊட்டியின் 200-வது ஆண்டை முன்னிட்டு, மே 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சலிவன் உருவ சிலையை திறந்துவைக்கிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
     
    தமிழக முதல்-அமைச்சர்   மு.க.ஸ்டாலின்  நீலகிரி மாவட்டத்துக்கு நாளை (19-ந் தேதி) வருகை தர உள்ளாா். 

    இதையொட்டி  அன்று  மாலை 3 மணியளவில் நீலகிரி-கோவை மாவட்ட எல்லையான பா்லியாறு பகுதியில் நீலகிரி மாவட்ட தி.மு.க. சாா்பில் அளிக்கப்படும் வரவேற்பில் தி.மு.க. துணை பொதுச் செயலாளா் ஆ.ராசா, மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் தலைமையில் குன்னூா் ஒன்றியம், உலிக்கல் பேரூராட்சி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொள்வா்.

    மாலை 4 மணிக்கு குன்னூா் ெரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் அளிக்கப்படும் வரவேற்பில் குன்னூா் நகரம், கோத்தகிரி ஒன்றியம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் மற்றும் மேலூா் ஒன்றிய பகுதிகளுக்கு உள்பட்ட கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
     
     மாலை 5 மணிக்கு ஊட்டி  சேரிங்கிராஸ் பகுதியிலும் அளிக்கப்படும் வரவேற்பில் ஊட்டி  நகரம், ஊட்டி  வடக்கு, ஊட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளுக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனா். 

    நீலகிரி மாவட்ட பாரம்பரிய முறைப்படி முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சியை 20-ந் தேதி காலை 10 மணியளவில் திறந்துவைக்க உள்ளாா்.

     ஊட்டியின் 200-வது ஆண்டை முன்னிட்டு, மே 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சலிவன் உருவ சிலையை திறந்துவைத்தும், 11 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறாா்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    Next Story
    ×