என் மலர்

  தமிழ்நாடு

  குட்டியுடன் ரோட்டை கடந்து செல்லும் யானைகளை படத்தில் காணலாம்
  X
  குட்டியுடன் ரோட்டை கடந்து செல்லும் யானைகளை படத்தில் காணலாம்

  குன்னூர் பகுதியில் குட்டியுடன் திரியும் யானைகள் செல்பி எடுக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யானைகள் தொடர்ந்து சாலையோரத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் யானைகளின் அருகே செல்ல வேண்டாம், செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் காடுகள் வறட்சியில் இருந்து மீண்டும் பசுமைக்கு திரும்பியுள்ளது.

  இந்த நிலையில் குட்டியுடன் யானைகள் கூட்டம் அங்கு முகாமிட்டுள்ளது. யானைகள் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து சென்று வருகின்றன. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி அருகே யானை கூட்டம் குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.

  இதையடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு யானைகள் சாலையை கடந்த பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

  யானைகள் தொடர்ந்து சாலையோரத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் யானைகளின் அருகே செல்ல வேண்டாம், செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  Next Story
  ×