என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள்
நீலகிரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
3,302 மாணவிகளும், 3,805 மாணவிகளும் என மொத்தம் 7,107 பேர் எழுதுகின்றனர்.
கோத்தகிரி:
கொரோனா பரவல் காரணமா கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொது தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. ஆனால் இநத ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வும், 6-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டத்தில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. இதற்காக 39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்னர் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உள்ளே அனுமதித்தனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 3,302 மாணவிகளும், 3,805 மாணவிகளும் என மொத்தம் 7,107 பேர் எழுதுகின்றனர். காலை முதலே மாவட்டத்தில் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குடை பிடித்து கொண்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தனர்.
Next Story






