என் மலர்tooltip icon

    நீலகிரி

    • உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.
    • பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    ஊட்டி மத்திய ரோட்டரி கிளப், நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி ஊட்டி மத்திய ரோட்டரிகிளப் தலைவர் ஷெரிப் முகமது, செயலாளர் கவுரி பாபு, நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா சொக்கன், செயலாளர் ஆனந்தி, சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.

    இதில் நுகர்வோர் பிரச்சனை தீர்வு கமிசன் தலைவர் டி.சித்ரா, உளவியலாளர் ஆலோசனை குழு உறுப்பினர் பி.சுசிலா சுரேஷ்,உளவியல் ஆலோசனையாளர் ஹானா டிக்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முனைவர் பொன்னுசங்கர், முனைவர் வடிவேலன், முனைவர் பாபு ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கினைத்தனர்.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
    • 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி பன்னிமாரா பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், அண்ணா நகர் பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடங்கி தரமான முறையில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டில் 917 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 903 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021-2022 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 1,507 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 313 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 196 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு 97 வீடுகள் முடிக்கப்பட்டுள்து. மீதமுள்ள வீடுகள் பல்வேறு நிலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதேபோல் மாவ ட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொண்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வீடுகள் கட்டி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட பயனாளி களிடம் ஒப்படைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் உள்ளனர்.

    • கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது.
    • வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி- குன்னூர் சாலை சவுத்விக் ஜெயா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி ஓடை போல் ஓடுகிறது.காலை நேரம் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர்.

    வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

    • பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகாா் அளித்தனா்.
    • இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் புலி உலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் புகாா் அளித்தனா்.அதைத் தொடா்ந்து, புலி நடமாட்டம் உள்ள பாதையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை வனத் துறையினா் பொருத்தினா்.இதன் மூலம் புலியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்றும், பொதுமக்கள் பயமின்றி இருக்கலாம் என்றும் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
    • ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களைகட்டி உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பல்வேறு வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ஒருமுறை, 3 ஆண்டுக்கு ஒரு முறை, 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டி மலைச்சரிவு மற்றும் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின. இந்நிலையில் தற்போது தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் நீல நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன. அங்கு சின்கோனா பகுதி, தேயிலை தொழிற்சாலை பகுதியிலும் குறிஞ்சி மலா்கள் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது பூத்து குலுங்கும் மலர்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தது. இவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா். ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களைகட்டி உள்ள நிலையில், தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்களை காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • குன்னூர் சிம்ஸ் பூங்கா தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது.
    • மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர். நீலகிரிக்கு மற்ற நாட்களை விட வெயில் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    சுற்றுலா பயணிகள்

    இதில் ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்வார்கள்.

    இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்காவில் இருந்த மரத்தில் இருந்த தேன் கூடு திடீரென எவ்வாறோ கலைந்தது. அதில் இருந்து வெளியேறிய தேனீகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கொட்ட தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    துரத்தி துரத்தி கொட்டியது

    ஆனால் அவர்களை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் பலர் காயம் அடைந்தனர். சில குழந்தைகளும் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த பூங்கா நிர்வாகத்தினர் அங்கு வந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.

    காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பூங்காவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பூங்கவில் இருந்து வேலையாட்களும் வெளியேற்றப்பட்டு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    பூங்காவில் தேனீக்கள் சுற்றுலா பயணிகளை தாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
    • வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள்.

     அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் காலை முதல் மாலை வரை நாங்கள் பல ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றோம். ஆனால் எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை. வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள். நாங்கள் எங்கே போவோம் என தெரிவித்தனர்.

    • நாட்டிலேயே முதன் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
    • கடந்த 3 ஆண்டாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    நாட்டிலேயே முதன் முறையாக முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து இயக்கப்படும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ெரயில் நீராவி என்ஜின் முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.

    திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட இந்த மலை ெரயிலின் புதிய என்ஜின் மேட்டுப்பாளையத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

    இந்த என்ஜின் நேற்று 4 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையம் முதல் அடர்லி ெரயில் நிலையம் வரை இயக்கி, முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி வரை இயக்கப்படும் மலை ெரயில், மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜினால் இயக்கப்படுகிறது.

    முதன்முறையாக. நிலக்கரியில் இயக்கப்பட்டு வந்த இந்த என்ஜின் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பர்னஸ் ஆயில் எனப்படும் அடர்த்தி மிகுந்த ஆயிலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்டது.

    சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மாற்று எரிபொருளாக டீசலை பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து மலை ெரயில் என்ஜினை வடிவமைக்க கடந்த 3 ஆண்டாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து தற்போது, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி உற்பத்தி செய்து இயங்கும் மலை ெரயில் என்ஜினை திருச்சி மலை ெரயில்வே பணிமனை பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். மேட்டுப்பாளையம்- குன்னூர் வரை இயக்கப்படும் மலை ெரயிலுக்கான நீராவி என்ஜின் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததால் அங்கிருந்து கொண்டு வரப்பட்டிருந்த என்ஜின்கள் பயன்படுத்தபட்டு வந்த நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியா ளர்கள் புதிய என்ஜினை வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளனர்.

    இந்த மலை ெரயிலுக்கான பல்வேறு உதிரிபாகங்கள் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு இந்த என்ஜினில் பொருத்தப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

    • தேயிலை விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிட தமிழக அரசின் இன்கோ சர்வ் நிறுவனம் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
    • இயற்கை உரத்தையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் கொள்முதல் செய்யக்கூடிய தேயிலைகளை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    தேயிலை விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிட தமிழக அரசின் இன்கோ சர்வ் நிறுவனம் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இயற்கை உரத்தையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு கிண்ணக்கொரை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800 விவசாயிகள் அங்கத்தினராக உள்ள நிலையில் விவசாயிகளுக்கு வழங்கிட கொண்டுவரப்பட்ட இயற்கை உரத்தை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பத்மநாதன், சிங்காரம், சிவராஜ் ஆகிய நிரந்தர தொழிலாளர்களும் ரமேஷ் என்ற தற்காலிக ஊழியரும் கள்ளச்சந்தையில் மொத்தமாக விற்றதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இயற்கை உரம் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒரு தற்காலிக ஊழியர் என 4 பேரை சஸ்பெண்டு செய்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    • கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தொடங்கினர்.

    முதற்கட்டமாக நேற்று சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் 1500 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள், வாக்குமூல விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்தநிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விட்டு இன்னும் ஒரு சில தினங்களில் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டும் என தெரிகிறது.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்கிறது. மழையும், பனி மூட்டமும் உள்ளதால் கடும் குளிர் காணப்படுகிறது.

    நேற்று இரவு பெய்த மழையால் குன்னூர் அருகே ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண்ணும், பாறைகளும் விழுந்ததால் தண்டவாளம் சிறிது சேதம் அடைந்தது.

    உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை தொடங்கியது. மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.

    • ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
    • பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி மூட்டம் மற்றும் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்பனி காணப்படும். அதன்பின் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி விழும். இச்சமயங்களில் கடும் குளிர் நிலவுவது மட்டுமின்றி, தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதிக்கும். அதேபோல், புற்கள் மற்றும் வனப்பகுதிகளும் காய்ந்துவிடும்.

    இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.

    பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    மேட்டுபாளையம்-குன்னூர் சாலையில் பனி மூட்டம் காரணமான காட்டேரி பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டது. எனவே பனி மூட்டம் காணப்படுவதால் மலை பாதைகளில் வளைவுகளில் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர். 

    ×