என் மலர்
நீங்கள் தேடியது "ஓடும் கழிவுநீர்"
- கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது.
- வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி- குன்னூர் சாலை சவுத்விக் ஜெயா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி ஓடை போல் ஓடுகிறது.காலை நேரம் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர்.
வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்






