புலி நடமாட்டத்தை கண்காணிக்க காமிராக்கள்

பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகாா் அளித்தனா். இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.
புலி நடமாட்டத்தை கண்காணிக்க காமிராக்கள்
Published on

ஊட்டி

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் புலி உலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் புகாா் அளித்தனா்.அதைத் தொடா்ந்து, புலி நடமாட்டம் உள்ள பாதையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை வனத் துறையினா் பொருத்தினா்.இதன் மூலம் புலியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்றும், பொதுமக்கள் பயமின்றி இருக்கலாம் என்றும் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com