search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி
    X

    நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

    • ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
    • பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி மூட்டம் மற்றும் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்பனி காணப்படும். அதன்பின் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி விழும். இச்சமயங்களில் கடும் குளிர் நிலவுவது மட்டுமின்றி, தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதிக்கும். அதேபோல், புற்கள் மற்றும் வனப்பகுதிகளும் காய்ந்துவிடும்.

    இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.

    பனி மூட்டத்தால் குளிர் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    மேட்டுபாளையம்-குன்னூர் சாலையில் பனி மூட்டம் காரணமான காட்டேரி பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டது. எனவே பனி மூட்டம் காணப்படுவதால் மலை பாதைகளில் வளைவுகளில் கவனமாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×