என் மலர்
நீலகிரி
- இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா வரவேற்றார்.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதி களையும் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தி தருதல், வாக்குசாவடிகளில் சாய்வுதளம் அமைத்தல், சக்கர நாற் காலி, தன்னார்வலர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அறிவுரைகளை செயல்படுத்தவும், கண் காணிக்கவும் மாவட்ட அளவிலான மையக்குழு ஏற்படுத்தப்பட்டுள் ளது.
18 வயது நிரம்பிய இளைஞர் கள் தாமாக முன்வந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.தொடர்ந்து, வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.பின்னர் மாவட்டத்தை சேர்ந்த 4 பழங்குடியினர் மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் அம்ரித் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு குறும் படத்தையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கலெக்டர் அம்ரித் பார்வையிட் டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை வழியாக சென்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன் பணியினை தொடங்கி வைத்தார்
- ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஊட்டி,
குன்னூா் அருகே உள்ள பழைய அருவங்காடு, இந்திரா நகா், நுந்தளாமட்டம், கேத்திப் பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கழிப்பறை வசதியில்லாத 110 குடியிருப்புகளுக்கு கிராமிய அளவிலான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், மகேந்திரா நிறுவனத்தின் கிராமப்புற வா்த்தக மேலாளா் ரவிசங்கா், மகேந்திரா வா்த்தக பிரிவைச் சோ்ந்த மகேஷ்கண்ணா, ஹைலேண்ட் டிரஸ்ட் இயக்குநா் அல்போன்ஸ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது
ஊட்டி,
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை பார்வையிட்டு, அவர்களின் மரியாதையை கலெக்டர் அம்ரித் ஏற்று கொண்டார்.
விழாவையொட்டி பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது
விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் செய்திருந்தார்.
- தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்
- ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும் கட்டிட தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதிபலன்களை உயர்த்த வேண்டும் எனவும், 50 வயது நிறைவடைந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரியும், தாய்சோலை எஸ்டேட்டில் 2018 - ம் ஆண்டு முதல் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பி.எப் ஓய்வூதியம், நிலுவை சம்பளம், பணிகொடை உடனடி வழங்க வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த தினசரி சம்பளம் ரூ.450 நிலுவை தொகை முறையாக மாத சம்பளத்தை 7 -ந் தேதிக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
- மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
- பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஊட்டி,
ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி ஊரகம் மற்றும் ஊரக மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி எம்.பாலடாவில் நேற்று நடைபெற்றது. அங்கிருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பரண்டு விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்து கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். சமூக நலன் மகளிர் உரிமைகள் துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பெண் குழந்தைகளுக்கு தலையில் மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை ஆர்.டி.ஓ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதி, துணை தாசில்தார் சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பாளர் பார்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார்.
- சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
விழாவினையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. மேலும், கிராம மக்களின் ஆன்மீக பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், ஐயனை அழைத்துச் செல்லுதல், முடி இறக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார். முன்னதாக கோவில் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
- கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமாக விளங்கி வருவது ஊட்டி.
சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை மிக குறுகலாகவும், சாலையின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் வளர்ந்தும்,சாலை ஓரத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டும் காணப்பட்டு வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் விதமாக கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியும், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்லும் விதமாக இன்டெர் லாக் கற்களை பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.
தற்போது அந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி அருகே ஒடேன் மற்றும் அதை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நடந்தே சென்று வந்தனர்.
மேலும் ஒடேன், ஜக்ககம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து ஒடேன் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கம் தொடங்கியது.
ஒடேன் கிராமத்தில் பஸ்சிற்கு பூஜை செய்து தொடங்கப்பட்டது. பஸ் உல்லத் தட்டி, ஜக்ககம்பை, ஒடேன் வழியாக கோத்தகிரிக்கு இயக்கப்படுகிறது.
கோத்தகிரியில் இருந்து காலை 6.50 மணி, மாலை 6 மணிக்கு என பஸ் இயக்கப்படுகிறது. பஸ் இயக்குவதற்கு உறுதுணையாக இருந்த கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமனுக்கு கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.
இதில் ஊர் தலைவர் சண்முகம், ஊர் நிர்வாகிகள் காந்தி போஜன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஒடேன் ரவி, ராஜி, ரமேஷ், ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
- தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது.
அரவேணு,
கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதி அருகே தனியார் பேக்கரிக்கு சொந்தமான தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது. அங்கு அடுப்பின் மேல் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கருப்புசாமி, தீயணைப்பு வீரர்கள் நித்தியானந்தன்,விஜய்க்குமார், மணி, முத்துகுமார் , கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்ேபாது 10 அடி நீள பாம்பு அங்கு இருந்தது. அதனை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
- தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது
- சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் காணப்படுகின்றன.
இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது.
சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி.
இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து வந்தார்.
அப்போது அங்கு தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது.
இதில் பயத்தில் பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.
இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் உலாவரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர்.
- கடும் உறைபனி கொட்டி வருகிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது.
போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் நோய்கள் தாக்கி தேயிலை செடிகள் கருகி உற்பத்தி குறைந்து காணப்பட்டு வருகிறது.
தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட ப்பட்டு உள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தேயிலை செடிகளை காப்பதற்க்கு செடிகளுக்கு மேல் பாகங்களை வெட்டி போடுதல் மற்றும் தேயிலை செடிகளின் தலைகளை பரப்பி விடுதல் என பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் பெரும்பா ன்மையான விவசாயிகள் ஸ்பிரிங்ளர் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் மூலமாக நீர் பா ய்ச்சு தேயிலை செடிகளின் பச்சை தன்மை மாறாமல் இருக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பனிகள் தேயிலை செடிகள் மீது படாமல் இருக்கின்றது.
கடுமையான வெயிலும், கடும் பணியும் காணப்பட்டு வந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இரவு முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டங்களுடன் சிறிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பணியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
- கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
- உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஊட்டி, நஞ்சநாடு கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவருக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினாா்.
மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலா்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் வாசுகி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.






