என் மலர்
நீங்கள் தேடியது "Amrit pleads"
- இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 13-வது தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா வரவேற்றார்.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதி களையும் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தி தருதல், வாக்குசாவடிகளில் சாய்வுதளம் அமைத்தல், சக்கர நாற் காலி, தன்னார்வலர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அறிவுரைகளை செயல்படுத்தவும், கண் காணிக்கவும் மாவட்ட அளவிலான மையக்குழு ஏற்படுத்தப்பட்டுள் ளது.
18 வயது நிரம்பிய இளைஞர் கள் தாமாக முன்வந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.தொடர்ந்து, வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.பின்னர் மாவட்டத்தை சேர்ந்த 4 பழங்குடியினர் மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் அம்ரித் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு குறும் படத்தையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கலெக்டர் அம்ரித் பார்வையிட் டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை வழியாக சென்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






