என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்

    • தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்
    • ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேலும் கட்டிட தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதிபலன்களை உயர்த்த வேண்டும் எனவும், 50 வயது நிறைவடைந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரியும், தாய்சோலை எஸ்டேட்டில் 2018 - ம் ஆண்டு முதல் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பி.எப் ஓய்வூதியம், நிலுவை சம்பளம், பணிகொடை உடனடி வழங்க வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த தினசரி சம்பளம் ரூ.450 நிலுவை தொகை முறையாக மாத சம்பளத்தை 7 -ந் தேதிக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    Next Story
    ×