என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தேவூர்:

    தேவூர் அருகே உள்ள சென்றாயனூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, மீனுவாயன்காடு, மேட்டுபாளையம், தண்ணிதாசனூர், பொன்னம்பாளையம், நல்லங்கியூர், கொட்டாயூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது அந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

    இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவூர் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி கரும்புகளை அறுவடை செய்து வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் அங்கு முகாமிட்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    தேவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த கரும்புகள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில வியாபாரிகள் தேவூரில் முகாமிட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளை வலியுறுத்தி உள்ளனர். இதனால் சில விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்புகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகை திருடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வடக்கு வீதியில் வசிப்பவர் ஷேக் அகமத்துல்லா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தேத்தாகுடி தெற்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்து போது திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட அதே கார் வந்துள்ளது. அதனை மறித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் தோப்புத்துறையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஷேக்அகமத்துல்லா வீட்டில் திருட்டில் பயன்படுத்திய கார் என்பதும், அதில் இருந்தவர்கள் திருட்டு கும்பல் என்பதும் தெரியவந்தது.

    வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (வயது 31), கும்மிடிபூண்டி மணிகண்டன் (33), சுரேஷ் (36) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் காசுகள் மீட்கப்பட்டது.
    சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் என்ஜினீயர் ஒருவர் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியம் வரைந்து சாதனை படைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது30). என்ஜினீயரான இவர் சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுனாமியின் போது மக்கள் அடைந்த துன்பங்கள், உயிர் மற்றும் உடமைகள் இழப்பு, சுனாமி காலத்தில் நடந்த மீட்பு பணிகள் ஆகியவற்றை தத்ரூபமாக மார்க்கர் போனா மூலம் வரைந்துள்ளார்.

    இது குறித்து கார்த்திக்ராஜா கூறியதாவது:-

    சிறு வயதில் இருந்து எனக்கு சிறந்த ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால பல ஓவியங்களை வரைந்துள்ளேன். இந்தநிலையில் இத்தாலி நாட்டில் 6ஆயிரத்து 118 சதுர அடியில்

    தனி நபர் ஓவியத்தை 5 நாட்கள் வரைந்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். இதை படித்து நானும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சுனாமி நினைவு நாளில் சுனாமியின் சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஓவியம் வரைய ஆசைப்பட்டேன். அதன்படி சுனாமி அலை எழுந்து வந்து பேரழிவை ஏற்படுத்தியதை ஓவியமாக வரைந்து உள்ளேன்.

    இதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ் உதவியை பெற்று ஓவியம் வரைய தொடங்கினேன். சிவகாசியில் இருந்து சற்று கடினதன்மை கொண்ட சார்ட் பேப்பரை வரவழைத்து அதை தரையில் ஒட்டினேன். அதில் மார்க்கர் பேனா மூலம் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியத்தை தனி மனிதனாக 10 மணி நேரம் 17 நிமிடத்தில் ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன். இந்த ஓவியம் முழுக்க முழுக்க சுனாமியின் சோகச்சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஓவியத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு கார்த்திக் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு அடுத்துள்ள வெண்மணச்சேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26).

    இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகையில் மீனவர்கள் வலையில் அதிசய முதலை மீன் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு நாட்டு படகு மீனவர் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீனின் தலை, பற்கள் அச்சு அசலாக முதலை போன்றும், உடல் முதலையின் கடினமான தோல் போன்றும் இருந்தது. வால் பகுதி கொடுவா மீன் போல இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதில் ஒருசிலர் இது மீனே கிடையாது என்றும் கூறினர். இதனால் இந்த மீனையாரும் வாங்க முன்வரவில்லை. அப்போது அங்கிருந்த ஒருவர் இந்த மீனின் சுவை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காக முதலை மீனை வாங்கி சென்றார்.

    தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மீனவர்கள் வலையில் சிக்கிய இந்த முதலை மீன் 3 அடி நீளமும், 10 கிலோ எடையும் இருந்தது. கரைக்கு கொண்டு வந்து இந்த மீனை வலையில் இருந்து எடுத்தபோது உயிரோடு இருந்ததாகவும், பின்னர் அது இறந்து விட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
    நாகையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெளிப்பாளையம்:

    நாகையை அடுத்த பாப்பாகோவில், சின்னப்பாலம் அருகே கஞ்சா விற்பதாக நாகை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாப்பா கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். ஆகாசுக்கு கஞ்சா பொட்டலங்கள் வழங்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாகையில், சீமான் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்தும்,161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றபோது, அந்த ராணுவத்தின் மீது வழக்கு தொடர்ந் தவர் மோடி. ஆனால் தமிழக மீனவர்கள் 480 பேர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி கொண்டிருக்கிறார்கள்.

    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும், படகுகளையும் பறி கொடுத்திருக்கிறார்கள். மத்திய அரசு மீனவர்களின் உயிருக்கு மதிப்பளிக்காமலும், உணர்வை பற்றி கவலைப்படாமலும் உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தின் கடலோர கிராமங்களை சூறையாடி பல ஆயிரம் உயிர்களை பறித்து சென்ற சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,060 பேர் உயிரிழந்தனர்.

    சுனாமி சூறையாடி விட்டுச் சென்று 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றாலும் தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் சுனாமி ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னமும் மாறவில்லை.

    நாகை, வேளாங்கண்ணி. மாவட்டத்தில் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக உயிரிழந்தவர்களை அடுக்கி வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் உயிர் பதைபதைக்கிறது.

    உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் படையலிட்டு பால் ஊற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இதைப்போல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் நினைவு ஸ்தூபி முன்பு சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மவுன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் உறவினர்கள், மீனவர்கள் இன்று கடற்கரையில் குவிந்து கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர். மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

    பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.

    அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததால் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.

    மழை நின்றவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து ேநற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மீன்களை பிடித்து கொண்டு நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.

    மீனவர்கள் வலையில் திருக்கை, மட்லீஸ், வாவல், காலா, நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இந்த மீன்களை வாங்க கடற்கரையில் வியாபாரிகள் குவிந்தனர். மீன்களை வாங்கிய வியாபாரிகள், அதை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் திருக்கை, மட்லீஸ் மீன்களும், மற்ற மீன்கள் 1 டன்னும் சிக்குவதால் மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று காலா மீன் ஒரு கிலோ ரூ. 550-ம், வாவல் மீன் ரூ.900-க்கும் மட்லீஸ் மீன் ரூ.100-க்கும், திருக்கை ரூ.150-க்கும் நீலக்கால் நண்டுரூ.850-க்கும், புள்ளி நண்டுரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதிக அளவில் சிக்கிய மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வேதாரண்யத்தில் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது.
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வடகிழக்குப்பருவ மழை காலத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் உப்பள பாத்திகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது.

    இதனால் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது. இந்த பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்தல், வரப்பு அமைத்தல், வாய்க்கால் சீர் செய்தல், தண்ணீர் இறைப்பதற்கு மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து முழுவீச்சில் உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    நாகை அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் மணிமாறன் (வயது21). அதே தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன்(21).

    மணிமாறன், ஹரிஹரன் ஆகிய இருவரும் தனது நண்பர் மனோஜ்குமாருடன் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் இறந்து விட்டார்.

    படுகாயமடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹரிஹரனும் இறந்தார். மனோஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×