என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கில் வேம்பதேவன்காடு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி நினைவு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு அதில் குடியிருந்து வருகின்றனர்.
இதில் 17 வீடுகள் தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த மழைக்காலத்தின் போது வீட்டின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இந்த 17 வீடுகள் எப்போது இடிந்து விடும் என்ற அச்சத்திலேயே அந்த வீட்டில் மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் சேதம் அடைந்து அபாய நிலையில் உள்ளதால் ஒவ்வொரு நாளும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் குழந்தையுடன் தூங்காமல் தவிர்த்து வருவதாக வீட்டில்
வசிப்போர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே நடுக்கடை கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு
கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமருகல் அருகே சூரியஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் முன்னிலை வகித்தார்.
திருமருகல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாசர் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நாகை மாவட்ட உதவி பொறியாளர் ராஜராஜன் கலந்துகொண்டு இலவச மின் இணைப்பு உள்ள விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம் குறித்தும்,வீடுகளுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைப்பது பற்றி கூறினார்.
இதில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி அறுவடை செய்யும் பணி தொடங்கியது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் பயிரிடப்பட்டு இருந்த நிலையில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
எஞ்சிய சம்பா பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி. கரையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில்
எந்திரம் மூலமாக அறுவடை செய்யும் பணியினை
தொடங்கியுள்ளனர்.
இம்மாதம் 10 மட்டும் 12-ந்தேதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவசர அவசரமாக அறுவடை செய்யும் பணியினை நாகை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
அதேசமயம் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மூட்டை ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய சம்பா நெல்லை தனியார் வியாபாரிகள்
900 ரூபாய்க்கும், சிலர் 950 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்து விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யத்தில் பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, ஆயக்காரன்புலம் ஒன்றாம்சேத்தி முதலியார் குத்தகை பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா
(வயது 20). நர்சிங் படித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு பிரதீபாவை கடித்தது.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம்
அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கண்ணியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்ப்பவனி விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணி
புனித அந்தோணியார் ஆலயத்தில் கொரோனா நோயிலிருந்து அனைவரையும் காத்திட வேண்டி சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல்
திருப்பலி பங்குத்தந்தை சவரிமுத்து அடிகளார்
தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து கண்கவர்
வானவேடிக்கை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சமூக விரோதிகளை கண்காணித்து வந்த நிலையில் வெளிப்பாளையம் நாடார் தெருவில் ஒரு குடோனில் திருடப்பட்ட வாகனங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவுப்படி வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவன் செட்டிதெருவை சேர்ந்த ரமணன், செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செல்சன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து
10-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம் பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் சம்பா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரகணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.
பல இடங்களில் பயிர்கள் முளைவிட தொடங்கி உள்ளது-.
தற்போது மழை நின்றும் தண்ணீர் வடியவில்லை.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு திடீர் கனமழையால் ஆள் கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் அடைந்துள்ளோம்.
சில இடங்களில் மூழ்கிய பயிர்களை ஆட்கள் மூலம் அறுவடை செய்கிறோம்.
வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மூழ்கிய நெற்கதிர்களை பார்வையிட்டு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சிலிண்டர் கரை ஒதுங்கியது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் சிலிண்டரை கைப்பற்றி எடுத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
மூழ்கிய சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமானது.
நாகப்பட்டினம்:
திருமருகல் வட்டார பகுதியில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.
நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மழையினால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், மீண்டும் பெய்த கனமழையால் பாதிப்புக் குள்ளாகி உள்ளோம்.
ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் இப்படி ஆகி விட்டது என்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.
மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.
மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.
கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.
மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.
மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.
கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.
கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.
கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.






