என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுனாமி நினைவு தினத்தையொட்டி கார்த்திக்ராஜா வரைந்த ஓவியத்தை படத்தில் காணலாம்.
நாகையில் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியம் - என்ஜினீயர் சாதனை முயற்சிக்கு கலெக்டர் பாராட்டு
சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் என்ஜினீயர் ஒருவர் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியம் வரைந்து சாதனை படைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது30). என்ஜினீயரான இவர் சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுனாமியின் போது மக்கள் அடைந்த துன்பங்கள், உயிர் மற்றும் உடமைகள் இழப்பு, சுனாமி காலத்தில் நடந்த மீட்பு பணிகள் ஆகியவற்றை தத்ரூபமாக மார்க்கர் போனா மூலம் வரைந்துள்ளார்.
இது குறித்து கார்த்திக்ராஜா கூறியதாவது:-
சிறு வயதில் இருந்து எனக்கு சிறந்த ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால பல ஓவியங்களை வரைந்துள்ளேன். இந்தநிலையில் இத்தாலி நாட்டில் 6ஆயிரத்து 118 சதுர அடியில்
தனி நபர் ஓவியத்தை 5 நாட்கள் வரைந்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். இதை படித்து நானும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சுனாமி நினைவு நாளில் சுனாமியின் சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஓவியம் வரைய ஆசைப்பட்டேன். அதன்படி சுனாமி அலை எழுந்து வந்து பேரழிவை ஏற்படுத்தியதை ஓவியமாக வரைந்து உள்ளேன்.
இதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ் உதவியை பெற்று ஓவியம் வரைய தொடங்கினேன். சிவகாசியில் இருந்து சற்று கடினதன்மை கொண்ட சார்ட் பேப்பரை வரவழைத்து அதை தரையில் ஒட்டினேன். அதில் மார்க்கர் பேனா மூலம் சுனாமியின் சோகத்தை விளக்கும் ஓவியத்தை தனி மனிதனாக 10 மணி நேரம் 17 நிமிடத்தில் ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன். இந்த ஓவியம் முழுக்க முழுக்க சுனாமியின் சோகச்சுவடுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஓவியத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு கார்த்திக் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Next Story






