search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு அறுவடை"

    • தரமான கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.
    • கொட்டாரம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் இடும்போது சூரிய பகவானுக்கு படைப்பதற்கு முக்கிய பொருளாக மஞ்சள்குலை மற்றும் கரும்பு பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து தான் இதுவரை குமரி மாவட்டத்துக்கு மஞ்சள் குலை மற்றும் கரும்புகள் சந்தைகளில் விற்பனைக்காக வந்து குவிந்த வண்ணமாக இருந்தன.

    ஆனால் இதுவரை நெல்பயிர், வாழை மற்றும் தென்னை சாகுபடி செய்யும் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்த கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதி விவசாயிகள் தற்போது மஞ்சள்குலை மற்றும் கரும்பு போன்றவற்றை பயிரிடும் பணியில் கடந்த 6 மாதங்களாக தீவிர மாக ஈடுபட்ட னர். நெல் பயிர் மற்றும் வாழை, தென்னை போன்ற சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாற்று பயிரான கரும்பு மற்றும் மஞ்சள் செடிகளை பயிரிடும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அதன் அடிப் படையில் கொட்டாரம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான கரும்புகள் மற்றும் மஞ்சள் குலைகளை பயிரிட்டு உள்ள னர்.இந்த கரும்பு மற்றும் மஞ்சள் குலைகள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மஞ்சள் குலை மற்றும் கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து கட்டு கட்டாக கட்டி டெம்போ மற்றும் லாரிகள் மூலம் சந்தைகளுக்கு அனுப்பிய வண்ணமாக உள்ளனர். தரமான கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

    ×