என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

    நான்காம் கால யாகசாலை பூஜைக்குப்பின் திரவுபதை அம்மன், அய்யனார் பச்சை முத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ந்தேதி கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ந்தேதி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    வேதாரண்யம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

    பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், சேதுசாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கணக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (34). இவர் கடந்த 17-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது திருத்துறைப்பூண்டி சாலையில் வேம்பதேவன்காட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அன்பழகனும் காயமடைந்தார்.

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் மணி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்பழகன் நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழனிசாமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதில் மணி சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    வேதாரண்யத்தில் தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51) விவசாயி. இவரது தாயார் கமலாம்பாள் (80) கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். 

    அவரது படத்திறப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில் தாயார் இறந்த சோகத்தில் இருந்த நாகராஜன் துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்& இன்ஸ்பெகட்ர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகை நகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்ற வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 28-வது வார்டுக்கு வாக்குப்பதிவு நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் வாக்களிக்க வந்தார். 

    அப்போது அ.தி.மு.க வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் முரளிதரன், அந்த வாலிபரிடம் இருந்த பூத் சிலிப்பை வைத்து வாக்காளர் பட்டியலை பார்த்தபோது அதில் ராமச்சந்திரன் என்று பெயர் இருந்தது. ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள ராமச்சந்திரன் தற்போது வெளிநாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் ராமச்சந்திரன் பெயரில் கள்ள ஓட்டுப்போட வந்தது தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது யாரும் புகார் தராததால் அவரை வெளியே விடுவதாக தகவல் பரவியது.

    இதனால் அ.திமு.க.வினர் நகர செயலாளர் தங்க.கதிவரன் தலைமையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். 
    இதையடுத்து பூத் ஏஜெண்ட் முரளிதரன் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். ஆனாலும் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் டவுன் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். 

    அப்போது இன்ஸ்பெக்டர் பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிடிபட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
    இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    மாசிமகப் பிரமோற்சவத்தை முன்னிட்டு வடக்குபொய்கைநல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை. நல்லூர் பழமை வாய்ந்த நந்தி நாதேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவம் 8&ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவத்தில் நந்திநாதேஸ்வரர், சவுந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாட மஹா தீபாராதனை காட்டப்பட்டன.
     
    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வர்ண வினாயகர் கோவிலில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் மற்றும் வீரன்குடிகாடு நந்தவன காளியம்மன் கோவில் நண்பர்கள் குழு செய்திருந்தனர்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழாவில் தியாகராஜ சுவாமி பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில், மாசிமகத் திருவிழாவை யொட்டி தியாகராஜசுவாமி பாத தரிசனம் கொடுத்து இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஹம்சநடன புவனி விடங்க தியாகராஜசுவாமி தேரில் வீதியுலா வந்த பிறகு வசந்த மண்டபம் எழுந்தருளி அதன் பிறகு நேற்று வசந்த மண்டபத்திலிருந்து பாத தரிசனம் அளித்து புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆஸ்தான வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலிய்பபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சியில் மும்முரமான வாக்குப்பதிவு, வரிசையில் நின்று வாக்காளர்கள் கடமை ஆற்றினார்கள்
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகை நகராட்சியிலுள்ள 36 வார்டு களில் 1 வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
     
    இந்நிலையில் 35 வார்டு களுக்கு 84 வாக்குச்சாவடி மையங்களிலும், வேதாரண்யம் நகராட்சியிலுள்ள 21 வார்டுகளுக்கு 36 வாக்குச்சாவடி மையங் களிலும, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகளுக்கும் 60 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தமாக 184 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் அதனை சரிபார்த்து தயார் நிலையில் வைத்தனர்.
     
    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

    அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய 4 பேருராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 70908பேரும், பெண் வாக்காளர்கள் 76589 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 499 வாக்காளர்கள் உள்ளனர். 

    நாகை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 184 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தூங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
     
    நாகை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள் கருதப்படும் 59 வாக்கு சாவடி மையங்களில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு  தேர்தல் வாக்கு காலை 7 மணிக்கு தொடங்கியது. இவை  மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு 36 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அமைதியான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது 

    சில வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே ஆர்வமாக வாக்காளர்கள் வாக்களித்தனர் வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி  வசதி செய்யப்பட்டுள்ளது . குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

    மேலும் வாக்குசாவடி வரும்  வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீர்காழி டிஎஸ்பி  லாமெக்  தலைமையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  போலீஸ் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழாவில் பூத கணங்களுடன் கல்யாணசுந்தரர் வீதியுலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று கோவில் வளாகத்தில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் கல்யாணசுந்தரர் பூத கணங்களுடன் எழுந்தருளினார்.

    பின்னர் வாணவேடிக்கையுடன் அலங்கார நான்கு சக்கர வாகனத்தில் வீதி உலாவாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. 

    மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ச்சியாக நாளை பூதகணங்களின் உதவியோடு நெல் மலையை ஆரூர்&க்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு 29.1.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 
    திருவிழாவின் ஒரு பகுதியாக மாசி மகத்தையொட்டி சந்திரசேகர சுவாமி பெரிய வெள்ளிரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து சன்னதி கடல் என்னும் வேதநதி கடற்கரை சென்றடைந்து அங்கு அஸ்த்ர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபட்டனர். பின்பு சுவாமி நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தினர், பஞ்சாயத்தார்கள் கூடி சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டனர். 

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஆறுகாட்டுத்துறை கிராம 
    பஞ்சாயத்தார் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசாரி பலியானார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சி, அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வந்தார். 
    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

     நெய்விளக்கு நால்ரோடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.
    இது குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்- இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×