என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தவர் சாவு
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கணக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (34). இவர் கடந்த 17-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது திருத்துறைப்பூண்டி சாலையில் வேம்பதேவன்காட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அன்பழகனும் காயமடைந்தார்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் மணி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்பழகன் நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழனிசாமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் மணி சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story






