என் மலர்
நாகப்பட்டினம்
காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை மண்டல கவுரவத் தலைவர் திருபுவன ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது: நாகை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் வரும் ஜனவரி ஜூன் 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ள அக்ரி எக்ஸ்போ 2022-ல் பங்குகொள்ள உள்ளார்கள். தற்போது காவிரி டெல்டாவில் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைவாக தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இருக்கு மேயானால் தேவைக்கேற்ப நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண் பொறியியல் துறை சி.டி வகுப்பு வாய்க்கால் தூர் வாருவதற்கு தமிழக வேளாண் துறை அனுமதி அளித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பி வகுப்பு பாசன வாய்க்காலை தூர்வாரினால் தான் பயனடைய முடியும். எனவே விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பி சி டி வாய்க்கால்களை இணைத்து தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, அந்த நாட்டின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்களின் மீது குண்டுகள் வீசியும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், தமிழ் மக்களை படுகொலை செய்த ராஜபக்சே, இப்போது இலங்கையில் பெரும் கலவரம் வெடித்து உயிருக்கு பயந்து குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளார்.
அவருக்கு இந்திய அரசு எந்த வித உதவியும் செய்யக்கூடாது. இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, மறைமுகமாக உதவி செய்யவோ கூடாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்கி உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகை அருகே கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாட நூல்களில் உள்ள ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பிப்பதோடு நிறுத்திவிடாமல், மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கான ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து கொடுக்கப்பட்ட தொடர் பயிற்சியின் காரணமாக சாதனையாளர்களாக 10 மாணவர்கள் தற்போது உருவாகி உள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இப்பள்ளியை சேர்ந்த பிரதீபா, அபிநயஸ்ரீ, ஜாஸ்னி, லோகேஷ், நக்ஷத்திரா, வனிதா, அன்னபூரணி, சரண்யா, கனிஷ்கா, நிஷாலினி ஆகியோர் 2.20 நிமிடங்களில் 360 மாவட்டங்களை சரளமாக கூறுதல், வாய்ப்பாடுகளை தலைகீழாக எழுதுதல், 1330 பொட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை வரைவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மிகக் குறுகிய நேரத்தில் நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இளம் வயதிலேயே 10 அரசு பள்ளி மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாகி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாகை சட்டையப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை சட்டையப்பர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் ரிஷப வாகனத்தில் சட்டையப்பர் வீதியுலா நடந்து முடிந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். நான்கு மாட வீதிகள் வழியாக வந்த தேரினை ஆரூரா தியாகேசா என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர்.
நாகூர் தேசிய பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் நலனுக்காக நடைபயண பிரார்த்தனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியைகள் நாகூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மாணவர்கள் நலனுக்காக நடைபயணம் மேற்கொண்டனர்.
பள்ளி இறுதி நாள் முடிந்த மறுநாளே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடை பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பி சிறப்பாக தேர்வு எழுதினால் பள்ளி ஆசிரியைகள் 8 பேர் வேளாங்கண்ணிக்கு நடந்து வருவதாக வேண்டி இருந்தனர்.
மாணவர்கள் நோய் பாதிப்பு இல்லாமல் மீண்டும் சிறப்பாக தேர்வு எழுதியதால் நடைபயணம் மேற்கொண்டனர்.
நாகையில் சிபிசிஎல் நிறுவன நில எடுப்பு திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பால்பண்ணைச்சேரி பகுதியில் இருந்து நாகை மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 படி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடியே 50 லட்சம் தொகையுடன் கூடுதலாக 30 சதவீதம் உயர்த்தி நிர்ணயித்து உத்தரவிட்ட பின்பு நிலம் எடுப்பு பணிகள் தொடங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் சகிலாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்து தனியாரிடம் தாரை வார்க்க போவதாக மத்திய அரசின் மீது விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருப்பூண்டியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை சுற்றுச்சூழல் துறை இணைந்து காற்று மாசுபாடு நீர் மாசுபாடு என்ற தலைப்புகளில் நாகை மாவட்ட தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தினர். திருப்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசு பொருளும் வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் ஆரிப், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞான–சேகரன், ஊராட்சி மன்ற தலைவி ராதிகா சத்யராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் முகமது ரபீக், நீர் தர பரிசோதகர் கோகுலகிருஷ்ணன் சமூக ஆர்வலர்கள் நாகூர் சித்திக் வேளாங்கண்ணி ஆரோக்கிய ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மஞ்சப்பை மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்க–ப்–பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை நல்கினார். பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.
நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட்: போட்டியில் வேதாரண்யம் அணி வெற்றி பெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 அணிகளின் வீரர்களுடன் வேதாரண்யம் அணியினரும் கலந்துகொண்டு விளையா டினர்.போட்டியில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வேதாரண்யம் பீனிக்ஸ் அணி பெற்றது.
இரண்டாம் இடத்தை ரூ.30 ஆயிரம் நாகை அணியும், மூன்றாம் இடத்தை ரூ.20 ஆயிரம் கீழ்வேளூர் அணியும் பெற்றது. வெற்றிபெற்ற வேதாரண்யம் அணிக்கு என்.வி.ஆர் சுழல் கோப்பையை கராத்தே வீரர் வினோத் பீனிக்ஸ் அணிக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவர்கள் செய்திருந்தனர்.
பனங்குடி கிராமத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் தாங்கினார்.
தாசில்தார் அமுதா, தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பனங்குடி கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வரும் 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இலவச தையல் இயந்திரம் என சுமார் ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 868 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் யசோதா, திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
வேதாரண்யம் அருகே ரூ.2.13 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் அரசின் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. கோட்டாட்சியர் துரைமுருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. ஷகிலா, ஊராட்சி தலைவர் கஸ்தூரி, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கலந்துகொண்ட 326 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், தையல் எந்திரம், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பிலான இடுபொருட்கள் உட்பட அரசின் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பேசினார்.
முன்னதாக அரசு சார்பில் மருத்துவம், விவசாயம், கல்வி உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டர்.
நிகழ்ச்சியில் வேதார ண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை, தோட்டகலைத்துறை இணை இயக்குநர் திவ்யா, அலுவலர்கள் சிவராமகிருஷ்ணன், வைரமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி. முருகவேல் அரசு அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
திருமருகல் அருகே திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட 7 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுபிக்ஷாமற்றும் நிவேதா ஆகிய இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்று ள்ளனர்.
தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் நான்குபேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ ர்களை ஊக்குவித்த தலைமை ஆசிரியரையும், ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
வடுகச்சேரியில் மருத்துவமனை கட்ட ரூ.80 லட்சம் பூர்விக நிலபத்திரத்தை கலெக்டரிடம் விவசாயி வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடுகச்சேரி ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமானால் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனை போக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரன் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 37 சென்ட் பூர்வீக இடத்தை மருத்துவமனை கட்ட வழங்கியதோடு இல்லாமல், அந்த இடத்தில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கு , தனது சொந்தமான 6 லட்சம் மதிப்பிலான நிலத்தில் மாற்று இடம் வழங்கியுள்ளார்.
இதற்கு உரிய பத்திரத்தை நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்யிடம் அதற்கான பத்திரத்தை நேரில் வழங்கினார். இந்த மனித நேயம் உள்ள செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.






