என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய பசுமை படை மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் பரிசு வழங்கினார்.
தேசிய பசுமை படை மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
திருப்பூண்டியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை சுற்றுச்சூழல் துறை இணைந்து காற்று மாசுபாடு நீர் மாசுபாடு என்ற தலைப்புகளில் நாகை மாவட்ட தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தினர். திருப்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசு பொருளும் வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் ஆரிப், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞான–சேகரன், ஊராட்சி மன்ற தலைவி ராதிகா சத்யராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் முகமது ரபீக், நீர் தர பரிசோதகர் கோகுலகிருஷ்ணன் சமூக ஆர்வலர்கள் நாகூர் சித்திக் வேளாங்கண்ணி ஆரோக்கிய ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மஞ்சப்பை மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்க–ப்–பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை நல்கினார். பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.
Next Story






