search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர் பி.ஆர் பாண்டியன் பேசினார்.
    X
    தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர் பி.ஆர் பாண்டியன் பேசினார்.

    காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

    காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
    நாகப்பட்டினம்:

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை மண்டல கவுரவத் தலைவர் திருபுவன ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது: நாகை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் வரும் ஜனவரி ஜூன் 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ள அக்ரி எக்ஸ்போ 2022-ல் பங்குகொள்ள உள்ளார்கள். தற்போது காவிரி டெல்டாவில் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைவாக தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இருக்கு மேயானால் தேவைக்கேற்ப நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வேளாண் பொறியியல் துறை சி.டி வகுப்பு வாய்க்கால் தூர் வாருவதற்கு தமிழக வேளாண் துறை அனுமதி அளித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பி வகுப்பு பாசன வாய்க்காலை தூர்வாரினால் தான் பயனடைய முடியும். எனவே விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பி சி டி வாய்க்கால்களை இணைத்து தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
    Next Story
    ×