என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் அருண்குமார், கல்லூரி முதல்வர் குணசேகரன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிபதி ஜெனிபர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு உதவி கள் பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞர் சத்திய ஸ்ரீ சர்மிளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது திருநங்கைகளை பொதுமக்கள் துன்புறுத்திப் பார்த்து மகிழ்வது, கேலி பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தோழமையுடன் பழக வேண்டும் என்று கூறினார்.
ஊத்தங்கரை மூத்த வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், தேவேந்திரன், முருகன், தண்டபாணி ஆகியோர், சட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்றும், சட்டப்பணி குழு பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் செய்து வருவது குறித்தும், எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி, ஊத்தங்கரை வட்டசட்டப் பணிக்குழுவைச் சேர்ந்த லாவண்யா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
- தகுதியுடைய பணிநாடு நர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, மாவட்ட நிர் வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தி ற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி, ஆலோ சனை வழங்கி பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், முன்னாள் முதல் அமைச்சர் கருணா -நிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணி யாட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான கல்வித்தகுதி, 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகள் ஆகும்.
தகுதியுடைய பணிநாடு நர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.
மேலும், இந்த முகாம்களில் கலந்து கொ ள்ளும் பணிநாடு நர்களுக்கு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க ப்படும். இம்முகாமில் பணிநாடுநர்கள் இல வசமாக கலந்துகொள்ள லாம்.
மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெற துறை த்தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
- நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசேகர் (வயது21). கூலித்தொழிலாளி. இவரது தாய்மாமன் மாதேஷ் (34). இவரது மனைவி, நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சென்ற சோமசேகர், மாதேஷின் மனைவியை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாதேஷ் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், கைக லப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மாதேஷ், கத்தியால் குத்தி யதில் வயிற்றில் காயமடைந்த சோமசேகர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேன்க னிக்கோ ட்டை போலீசார் வழக்கு ப்பதிந்து, மாதேஷை கைது செய்தனர்.
என் மனைவியை பொது இடத்தில் கேலி-கிண்டல் செய்ததால் சோமசேகரை தட்டிகேட்டேன். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதனால் ஆத்திரத்தில் சோமசேகரை கத்தியால் வயிற்று பகுதியில் குத்திவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தாக போலீசார் கூறினர். இதையடுத்து நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.
- வெங்கட லட்சுமியை அவரது உறவினர்களான லட்சுமி, கல்யாணி இருவரும் சேர்ந்து தாக்கி, சுடு தண்ணீ ரில் மிளகாய் பொடி தூவி முகத்தில் ஊற்றியுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காமன்தொட்டி அடுத்த பாதக்கோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடலட்சுமி(வயது48). இவரது பூர்வீக நிலம் கிருஷ்ணகிரி அடுத்த பாலக்குறி கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த, 17-ந் தேதி இரவு வெங்கட லட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் அவரது உறவினர்கள் மாடுகளை கட்டி மேச்சலுக்கு விட்டுள்ளனர். இது குறித்து தட்டி கேட்ட வெங்கட லட்சுமியை அவரது உறவினர்களான லட்சுமி (60), கல்யாணி (32) இருவரும் சேர்ந்து தாக்கி, சுடு தண்ணீரில் மிளகாய் பொடி தூவி முகத்தில் ஊற்றியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கட லட்சுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்து அங்கிருந்து கொடுத்த புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.
- ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.
- 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை சரக அளவிலான பாரதியார் மற்றும் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இப்போட்டியில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் 14 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் தேனமுதன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கார்த்திகேயன் மற்றும் தீபக்சரன் முதலிடம் பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.
பெண்கள் 17 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் தனுஷா பாரதி முதலிடமும் இரட்டையர் பிரிவில் தனுஷாபாரதி மற்றும் கனிமொழி முதலிடமும் பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி யளித்த உடற்கல்வி ஆசிரியர் களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபாதி திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
- ஓசூரில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை சார்பில், ஓசூர் ஜுஜு வாடியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை சார்பில், ஓசூர் ஜுஜு வாடியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜூஜுவாடி மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடந்த முகாமிற்கு, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும், அ.தி.மு.க. பகுதி செயலா ளருமான அசோகா தலை மை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் முன்னி லை வகித்தார். இதில் டாக்டர்கள் நீரவ், சுபாஷ், தீபிகா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
மருந்து,மாத்திரைகளும் இலவ சமாக வழங்கப்பட்டது.இதில், மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு துணை மேலாளர் செந்தில் குமார், பள்ளி தலைமை யாசிரியர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த அம்பேத் கர் காலனியை சேர்ந்தவர் அகிலன்(எ)அகில்(வயது26). இவர், கிருஷ்ணகிரியில் சேலம் மேம்பாலம் அருகில் உள்ள கார்வேபுரம் பகுதி யில் வசித்து வந்தார்.
இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப் பள்ளி, ஓசூர் ஹட்கோ, சிப்காட், போலீஸ் ஸ்டேஷன் களில், 2 கொலை, 1 கொலை முயற்சி, 1 பெட்ரோல் குண்டு வீச்சு, ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொது மக்களை அச்சுறுத்திய அகி லனை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன் கைது செய்தார்.
இவ்வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகி லனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், சேலம் மத்திய சிறையில் வழங்கினார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அகிலனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
- அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
- ஒரே நாளில் கிருஷ்ணகிரி பகுதியில் 3 பிக்கப் வேன்களில் 6.55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி,
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், கோவை மண்டல எஸ்.பி.பாலாஜி மேற்பார்வையில் பொது விநியோகத்திட்ட அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் சரக டி.எஸ்.பி விஜயகுமார் மேற்பார்வையில், நேற்று கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்ஐ.க்கள் கிருஷ்ணவேணி, மணிகண்டன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இரண்டு பிக்கப் அப் வேன்களை சோதனை செய்தனர். அதில் பெரிய மற்றும் சிறிய அளவில் 90 மூட்டைகளில் 4500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வேன்களை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி கட்டிகா னப்பள்ளி சிவக்குமார் மகன் மணிகண்டன், கட்டி கானப்பள்ளி பொன்மலை க்கோயில் முருகன் மகன் லோகேஷ் ஆகிய இருவரை கைது செய்து, அரிசியுடன் பிக்அப் வேன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் வாகனம் மற்றும் அரிசி உரிமையாளர்களான முனியப்பன், அமரேஷ், வசந்த், பரத் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
இதே போல், சப்இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாரியம் புதூர் கிராமம் அருகில் வாகன தணி க்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 41 மூட்டைகளில் 2050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டு, வேனை ஓட்டி வந்த டிரைவரான கிருஷ்ணகிரி மூங்கில்புதூர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.
மேலும் வேன் மற்றும் அரிசி உரிமையாளரான கோவிந்தராஜ்(எ)மெர்சல் மற்றும் காளியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் இந்த அரிசியை கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமங்களில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய கர்நாடகாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி பகுதியில் 3 பிக்கப் வேன்களில் 6.55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சை பெற்று வந்த ஸ்ரீமான் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாபுரம் கிராமம்.
இங்குதனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
இதை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ஓசூர் நிலவரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (வயது52) தலைமையில் தனி தாசில்தார் முத்து பாண்டி (47), தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி உள்ளிட்டோர் பட்டாசு ஆலைக்கு ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்து பெட்டிகள் கீழே தவறி விழுந்தன. இதில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, பட்டாசு குடோன் மேலாளரான மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமான் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமில், அஞ்செட்டி தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைகிராம பகுதிகளி லிருந்தும், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலிருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
- முகாமில் எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மருத்துவம் போன்ற நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஓசூர்,
முன்னாள் முதல்வர் கருணா நிதியின் நூற் றாண்டை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளு க்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த இம்முகா மிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். இந்த முகாமில், தகுதி வாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை களை, கலெக்டர் சரயு,ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர்.
மேலும், 20 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள், 2 பேருக்கு ரூ. 19,400- மதிப்பி லான சக்கர நாற்காலிகள் மற்றும் 3 பேருக்கு ரூ.6,600- மதிப்பி லான ஊன்று கோல்களை, கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ. ஒய்.பிர காஷ் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகளை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாமை, கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் சரயு கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓசூரில் இன்று நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், அஞ்செட்டி தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைகிராம பகுதிகளிலிருந்தும், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலிருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மருத்துவம் போன்ற நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் இதேபோன்ற, தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், அடுத்த (செப்டம்பர்) மாதம் 2-ந் தேதி, கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. எனவே, மாற்றுத்திறனா ளிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த முகாமில், ஓசூர் மாநகராட்சி ஆணை யாளர் சினேகா, சப்- கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறு வடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.
- நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தி யதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர்காப்பு காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய 2 யானைகள் குடியூர், கூச்சுவாடி, நெல்லுகுந்தி, அரசச்சூர், சித்தலிங்ககொட்டாய் ஆகிய வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்தன. பின்னர் இந்த யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.
தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பலாப் பழங்களை தின்றும், காய்களை பறித்து கீழே போட்டும் சென்றன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளால் சேதமடைந்த வயல் மற்றும் மரங்களை பார்வையிட்டனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
- முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி,
மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் 3 வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.






