என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
    • பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    ஓசூர்,

    தேன்கனிக்கோட்டை தாலுகா காருகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 28). காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பாகலூர்-மாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அட்டகுறுக்கி, காமன் தொட்டி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பண்ணப் பள்ளி, ரவுத்தப் பள்ளி, பாரதிபுரம், யு.கொத்தூர், தும்மை ப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லு குறுக்கி, கொத்த கோட்டா, அட்ட குறுக்கி, ஒட்டர் பாளையம், குக்கலப் பள்ளி, சுப்புகிரி, கான லட்டி, கோனோப் பள்ளி, பிள்ளை கொத்தூர், பாத்த கோட்டா, ராமாபுரம், ஆழியாளம் ஆகிய பகுதி களிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது34). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிபி ரகாஷ், அருணாசலம்.

    இந்த நிலையில் சந்தா புரம் பகுதியில் விநா யகர் சதூர்த்தியை யொட்டி நேற்று கொடி யேற்று விழா நடந்தது. இந்த விழாவில் மோதல் ஏற்பட்டது.

    இதில் மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.

    இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் வாட்டர் வாஜித். இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே யுள்ள முஸ்லிம் கொட்டாய் பகுதியில் மசூதியில் உருசு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வாட்டர் வாஜித் சொகுசு காரில் வந்தார். பின்னர் அவர் மசூதிக்குள் சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓசூர் அருகே மதுபோதை யில் ரவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியன குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது45).

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஓசூர் அருகே மதுபோதை யில் ரவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஏகம்ப வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லண்டன்பேட்டை பி.எஸ். என்.எல். அலுவல கம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவிற்கு காங்கி ரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ரகமத் துல்லா தலைமை தாங்கி னார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார்.

    இதில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஏகம்ப வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரவ ணகுமார், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் நாகராஜ், ராகுல் பேரவை மாவட்ட தலைவர் குட்டி என்கிற விஜயராஜ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமல க்கண்ணன், மாவட்ட நிர்வா கிகள் ஏழுமலை, அமா வாசை, முன்னாள் வட்டார தலைவர் ஷான வாஸ், சந்திரசேகர், அஜிசு ல்லா, நித்தியானந்தா, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூ ரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலை வர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலு வலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு தமிழக அரசு சமூக நலத்திற்காகவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக செயல்படுத்தும் திட்டங்க ளை விளக்கினார். மேலும் பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நினைவு பரிசுகளை வழங்கி னார். இதில் என்.எஸ்.எஸ். அலுவலர் முருகன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வாக்குச்சாவடி பொறு ப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம், கட்சி அலுவ லகத்தில் நடை பெற்றது.
    • நகர தி.மு.க செயலா ளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

     தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறு ப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம், கட்சி அலுவ லகத்தில் நடை பெற்றது.

    இதில் நகர தி.மு.க செயலா ளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    பொதுக்குழு உறுப்பினர் அப்துல்கலாம், அவைத்தலைவர் சீனி வாசன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், துணைசெயலாளர் இத யத்துல்லா, வெங்கடசாமி, கிருஷ்ணன், எல்லப்பன், முஜாமில் பாஷா, சிவராஜ், லிங்கோ ஜிராவ், சேகர், சென்னீரா மற்றும் முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

    • அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீதுமோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள குருமாலுபட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது68). இவர் நேற்று சூளகிரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீதுமோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டிருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் போனை திருட முன்றார்.

    ஓசூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அலங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெகன் (31). இவர் ஓசூர் குமுதேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    இவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் போனை திருட முன்றார்.

    இதை பார்த்த ஜெகன் அவரை பிடித்து அட்கோ போலீசில் ஒப்படைத்தார்.

    பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது செயர் செங்கதிர் என்கிற சங்கர் (27), சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.
    • நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலுப் பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதற்கு கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    அவர் பேசும் போது, மனிதனை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் வாழ செய்வதற்கு உருவாக்கப் பட்ட மதங்கள், இன்று மனிதனை அடிமையாக்கி கொண்டி ருக்கிறது.

    ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.

    நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது. இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பவுத்த மதம் போன்றவை உள்ளது.

    எந்த மதமும், கடவுளும் யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. இந்து சமயத்தில் அன்பே சிவம் என்று பகவத் கீதை சொல்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பா கவும், இல்லாதவர்களுக்கு தேவையானவையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதே போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பையும், அமைதியையும் போற்றி வாழ வேண்டும் என்று பவுத்த மதம் கூறுகிறது.

    மனிதத்தை காத்து வாழ வேண்டும் என்று இஸ்லாமிய மதம் கூறுகிறது. மதங்கள் அனைத்தும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின. அனைத்து மதங்களும் ஒற்றுமையையும் அன்பையும் போதிக்கின்றன என கூறினார்.

    இந்த விழாவில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர்கள் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, சரவண குமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பேரா சிரியர் தனசீலன் நன்றி கூறினார். 

    • முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
    • செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சூலாமலை யில் செயிண்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அனைத்து துறை மாண வர்களுக்கு இடையேயான போட்டிகள் விங்க்ஸ் 2023 என்ற பெயரில் நடந்தது.

    இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள், பேச்சு போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம், கவிதை போட்டிகள் நடைபெற்றது.

    இதில் முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    இதில் அதிக போட்டி களில் வென்று முதலிடம் பிடித்த கணினி, இ.சி.இ. மற்றும் சிவி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் சுழற்கோப்பையை தட்டி சென்றனர்.

    இந்த விழாவிற்கு செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பாலி டெக்னிக் கல்லூரி இயக்குனர் குமரேசன், முதல்வர் சையத் ஆசிப் அகமது, துணை முதல்வர் ராகவேந்திர பிரசாத் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி னார்கள்.

    ×