வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி

அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.
வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி
Published on

ஓசூர்,

தேன்கனிக்கோட்டை தாலுகா காருகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 28). காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இவர் கடந்த 18-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பாகலூர்-மாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com