என் மலர்
கிருஷ்ணகிரி
- கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்த 5 யானைகள வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
- நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 5 யானைகள் தாவரக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை, பட்டாசு வெடித்தும் தாரைதப்பட்டை அடித்தும் நொகனூர் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் தாவரகரை, கண்டகானப்பள்ளி, கெண்டகானப்பள்ளி மற்றும் கேரட்டி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்தது.இதைத்தொடர்ந்து அந்த யானைகள் கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகி, தக்காளி, முட்டைகோஸ், தென்னை மா உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து, யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வனச்சரகர் முருகேசன் தலைமையில், வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்த 5 யானைகள வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 5 யானைகள் தாவரக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை, பட்டாசு வெடித்தும் தாரைதப்பட்டை அடித்தும் நொகனூர் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
மீண்டும் யானைகள் கிராம பகுதிக்கு வராதவாறு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பர்கூர் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும் உள்ளது.
- ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வருகிற 28ம் தேதிக்குள் அளிக்கலாம்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டி யலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளி யிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் 1.1.2024ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேற் பட்ட வாக்குச்சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங் களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை மாற்று தல் போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சா வடிகளின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியி டப்பட்டுள்ளது. இப்பட்டி யலின்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பர்கூர் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளும்,
கிருஷ்ணகிரி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், வேப்பனஹள்ளி தொகுதியில் 312 வாக்குச் சாவடிகளும், ஓசூர் தொகு தியில் 381 வாக்குச் சாவடிகளும், தளி தொ குதியில் 303 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1883 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன.
இதில் ஓசூர் மற்றும் தளி சட்டமனற் தொகுதியில் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட 3 வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதியதாக 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ள்ளன.
இது போன்று பழுத டைந்த கட்டிடங் களுக்கு பதிலாக ஊத்தங் கரை சட்டமன்ற தொகு தியில் 2 வாக்குச் சாவடிகளும், பர்கூர் சட்டமன்ற தொகு தியில் 2 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 3 வாக்குச் சாவடிகளும், தளி சட்ட மன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் மேல்முறையீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வருகிற 28ம் தேதிக்குள் அளிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி, தனி தாசில்தார் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- நாக தேவதைகளுக்கு பாலா பிஷேகம், பூஜைகள் செய் தும், பாம்பு புற்று களுக்கு பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
நாக பஞ்சமி பண்டிகை, நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேக நகரில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு நாக பஞ்சமி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து திரளான ஆண், பெண் பக்தர்கள் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள இடுகுஞ்சி மகா கணபதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.
விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதே போல், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோவி லில், ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடத்தப் பட்டது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித் தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள நாக தேவதைகளுக்கு பாலா பிஷேகம், பூஜைகள் செய் தும், பாம்பு புற்று களுக்கு பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
- பல்வேறு கோரி க்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொது மக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதியில்லாத மனுக்க ளுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா வினையொட்டி கிருஷ் ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ந் தேதியன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்குபெறும், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு நடை பெறுவதை பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக விழிப் புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் ரமேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம்.
- எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா படப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலு வலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: -
நாங்கள் வம்சாவழியாக மேற்காணும் விலாசத்தில் வசித்து வருகிறோம். கடந்த 1988ம் ஆண்டு எங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.
அதனை மாற்றி தனி பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம். 2 வாரங்களில் அதற்குண்டான பதில் அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர்.
ஆனால் எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை. வந்த வர்கள் ஊரில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என்ற விவரத்தை மட்டும் கேட்டு சென்றுள்ளனர்.
இதுநாள் வரை எங்களுக்கு எந்த பதிலும் கூறவில்லை. எனவே, சம்ம ந்தப்பட்ட அதிகாரி களை உடனடியாக அழைத்து, எங்களுக்கு தீர்வு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அட்மா திட்டத்தின் கீழ், நடுப்பட்டி ஊராட்சியில் கிராம விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
- வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அட்மா உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவு செய்தல் குறித்தும் விளக்கினார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ், நடுப்பட்டி ஊராட்சியில் கிராம விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமை வகித்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பயன்கள் குறித்தும், பயிர்கடன் அட்டை பெற விண்ணப்பிப்பது பற்றியும், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், சொட்டு நீர் பாசனத்தில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தும் மானிய திட்டங்கள் குறித்து விளக்க மளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அட்மா உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவு செய்தல் குறித்தும் விளக்கினார்.
இறுதியாக அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி நன்றி கூறினார். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்டத் தில் தடை செய்யப் பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித் தனர்.
- கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பால குறி முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சேட்டு (27), கார்த்திக் (22) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்து வந்தனர்.
அப்போது ஓசூர் டவுன், சிப்காட், மத்திகிரி, அட்கோ, சூளகிரி, பாகலூர்- ஊத்தங்கரை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,750 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.
இதேபோல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் குட்கா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, பர்கூர், கெலமங்கலம், ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,400 மற்றும் ரூ.4ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாலகுறி முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சேட்டு (27), கார்த்திக் (22) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.
- சிப்காட் தொழிற்பேட்டை யில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப் படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
ஓசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா இன்று தொடங்கியது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
அதன்படி, ஓசூர் பிளாட் எண்.308, 309 சிப்காட்தொழில் வணிக வளாகம், லால் கம்பெனி எதிரில், எஸ்.பி.ஐ. வங்கி அருகில், சிப்காட் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தின் பல்வேறு திட்ட ங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் 3 சதவீதம்) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீதம், எந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை இந்த சிறப்பு தொழில் முகாமில் வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு 04344-278876, 275596 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
- பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.
ஓசூர்,
தேன்கனிக்கோட்டை தாலுகா காருகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 28). காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இவர் கடந்த 18-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பாகலூர்-மாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அட்டகுறுக்கி, காமன் தொட்டி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பண்ணப் பள்ளி, ரவுத்தப் பள்ளி, பாரதிபுரம், யு.கொத்தூர், தும்மை ப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லு குறுக்கி, கொத்த கோட்டா, அட்ட குறுக்கி, ஒட்டர் பாளையம், குக்கலப் பள்ளி, சுப்புகிரி, கான லட்டி, கோனோப் பள்ளி, பிள்ளை கொத்தூர், பாத்த கோட்டா, ராமாபுரம், ஆழியாளம் ஆகிய பகுதி களிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது34). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிபி ரகாஷ், அருணாசலம்.
இந்த நிலையில் சந்தா புரம் பகுதியில் விநா யகர் சதூர்த்தியை யொட்டி நேற்று கொடி யேற்று விழா நடந்தது. இந்த விழாவில் மோதல் ஏற்பட்டது.
இதில் மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.
இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் வாட்டர் வாஜித். இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே யுள்ள முஸ்லிம் கொட்டாய் பகுதியில் மசூதியில் உருசு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வாட்டர் வாஜித் சொகுசு காரில் வந்தார். பின்னர் அவர் மசூதிக்குள் சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






