என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான சாலையை கடக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
    X

    பள்ளி முன்பு பேரிகை- தீர்த்தம் சாலையை மாணவர்கள் கடந்து செல்லும் காட்சி.

    ஆபத்தான சாலையை கடக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

    • பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
    • மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை- தீர்த்தம் நெடுஞ்சாலையில் அமைந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளில் பேரிகை சுற்றுவட்டார பகுதியான பேரிகை, பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, கே.என்.தொட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் போதிய அளவுக்கு வகுப்பறைகள் இருப்பதாகவும், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து சிறுநீர் கழிக்க சென்று வருகின்றனர்.

    இதனால் அந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி பள்ளி மாணவர்கள் காயமடைந்து வருகின்றனர்.

    மேலும், பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதில் மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நவீன முறையில் கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி அருகே உள்ள சாலையில் ஒரு வேகதடையை அமைக்க வேண் டும் என்றும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    Next Story
    ×