என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் நாகாத்தம்மன் கோவிலில்  பக்தர்கள் வழிபாடு
    X

    ஓசூர் நாகாத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

    • நாக தேவதைகளுக்கு பாலா பிஷேகம், பூஜைகள் செய் தும், பாம்பு புற்று களுக்கு பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    ஓசூர்,

    நாக பஞ்சமி பண்டிகை, நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேக நகரில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு நாக பஞ்சமி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து திரளான ஆண், பெண் பக்தர்கள் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள இடுகுஞ்சி மகா கணபதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.

    விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதே போல், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோவி லில், ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடத்தப் பட்டது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித் தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள நாக தேவதைகளுக்கு பாலா பிஷேகம், பூஜைகள் செய் தும், பாம்பு புற்று களுக்கு பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×