என் மலர்
கிருஷ்ணகிரி
- அ.தி.மு.க. மாநாட்டிற்கு தொண்டர்கள் பேருந்துகள் மூலம் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
- வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ வுமான கே.பி.முனுசாமி காய மடைந்த 3 பேரின் இல்லங்க ளுக்கு நேரில் சென்று நலன் விசா–ரித்து ஆறுதல் கூறினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்தில் இருந்து மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிற்கு தொண்டர்கள் பேருந்துகள் மூலம் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம்செய்த மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த அன்பரசு வயது (26), புட்டாமூப்பர் கொட்டாய் பகுதியை கருணாநிதி (57), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்தி ரன் வயது (57) ஆகிய 3 பேரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகி–றார்கள்.
இவர்களை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை பொது செயலாளர் மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ வுமான கே.பி.முனுசாமி காய மடைந்த 3 பேரின் இல்லங்க ளுக்கு நேரில் சென்று நலன் விசா–ரித்து ஆறுதல் கூறினார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ தமிழ்செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்கள்.
இதில் மத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன், மாவட்ட இணை செயலாளர் சாகுல் அமித், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரே ஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஒன்றிய துணை செயலாளர் இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகி–ருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட இளம்பாசறை செயலாளர் முரளி பிரசாத், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் மணி, ஒன்றிய மீனவரணி செயலா ளர் முனுசாமி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் செல்வம், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திருமால், ஒன்றிய மாணவ ரணி துணை செயலாளர் சுரேஷ், இளம் பாசறை பாண்டியன்,
- டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- 31 பயனா ளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 32 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் தளி டி.ராமச்சந்திரன், பர்கூர் டி.மதியழகன், போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்போரூர் பாலாஜி, பரமத்திவேலூர் சேகர் ஆகியோர் நேற்று கிருஷ்ண கிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்க ளுடன் மாவட்ட கலெக்டர் சரயு உடன் சென்றார்.
நீர்வளத்துறை சார்பில் ரூ.187 கோடியே 77 லடசம் மதிப்பில் நடந்து வரும் எண்ணேகொள் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இந்த திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் 7 ஏரிகள் மற்றும் ஒரு அணை மூலம் 23 கிராமங்களை சேர்ந்த 3,408 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து குழுவினர் போலுப்பள்ளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலை ப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்கள் வருகை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன், கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறை களை உடனடியாக சீரமைக்க பொது ப்பணித்துறை (கட்டிடங்கள்) அலுவலர்களுக்கு அறிவுறு த்தினர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை, நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி, பாரண்டப்பள்ளி ஓலா வாகன தொழிற்சாலை, ஓலைப்பட்டி செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடி க்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து 31 பயனா ளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 32 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜே ஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவ ருடைய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது கிணற்றில் கிடந்த வாலிபர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவா (வயது27). கட்டிட மேஸ்திரி யாக வேலை செய்து வந்தார் என்பது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.
- கார்த்திக்கின் லீலைகள் குறித்து அந்த 3 பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது.
இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சமீபத்தில் விவசாய வேலைக்கு செல்லும் பெண்ணை கோவிலில் தாலி கட்டி 3-வதாக திருமணம் செய்து கொண்டார். பல நாட்களாக 3 பேருடன் மாறி மாறி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக்கின் லீலைகள் குறித்து அந்த 3 பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட 3 பேரும் தங்களது பெற்றோருடன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.
- 2 யானைகளும் முகா மிட்டுள்ளதால், வனப்பகு தியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
- வனத்தை யொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜ கடை வனப்பகுதியில், ஆந்திரா மாநில எல்லையில் உள்ள வனப்பதியாகும். இந்த வனப்பகுதியில் ஏற்கனவே 5 யானைகள் முகாமிட்டுள்ளன.
அந்த யானைகள் அடிக்கடி வனத்தை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் தமிழக எல்லை வனப்பகுதியான, கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்தது.
இந்த யானைகளை வனத்துறையினர், வேறு வனப்பகுதிக்கு விரட்ட முயன்ற போது, அவை மகாராஜகடை வனப்பகுதிக்கு வந்துவிட்டது. ஏற்கனவே 5 யானைகள் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 2 யானைகளும் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே, வனத்தையொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
- கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காளிக்கோவில் வாகன சோதனை சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.
- அரிசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை (பறக்கும் படை) தனி தாசில்தார் இளங்கோ, பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் துரை முருகன், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காளிக்கோவில் வாகன சோதனை சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 38 சாக்குபைகளில் தலா 50 கிலோ எடையில் 1.9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் கோபி (வயது18) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆந்திரா மாநிலம் குப்பத்தை சேர்ந்த கணேஷ் என்பவர், பர்கூர் அருகே உள்ள காரகுப்பம் கிராமத்தில் இருந்த தனது காரில் ரேசன் அரிசியை ஏற்றி விட்டதாகவும், அதை குப்பத்திற்கு எடுத்து வர சொல்லிவிட்டு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அரிசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட கார் மற்றும் கார் டிரைவர் கோபியை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.2000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- பணம் வைத்து சூதாடியதாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம் உட்பட மாவட்டம் முழுவதும் 44 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் கஞ்சா விற்பனை செய்ததாக, ராயக்கோட்டை, தளி, ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.8,500 மதிப்புள்ள கஞ்சா, கஞ்சா சாக்லெட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல மாவட்டத் தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அதன்படி சாமல்பட்டி, பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல பணம் வைத்து சூதாடியதாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம் உட்பட மாவட்டம் முழுவதும் 44 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8,200 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
- அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை தொட ர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில், அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடை களில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் போலீ சாரும் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர் களிடம் கேட்ட போது, மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள், ஹார்டு வேர்ஸ் கடை, வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் மருத்துவனைகள், போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், போதிய பாதுகாப்பு மற்றும் அவசர விபத்து காலங்களில் வெளி யேற போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு போலீசார் சார்பில் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டு, அறிக்கை அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.
மேலும், வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடை களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 133 அரசு ஆரம்பள்ளிகளில் மிக சிறந்த முறையில் காலை உணவு 7975 மாண வர்களுக்கு வழங்கபட உள்ளது.
- ஆசிரியர்கள் சமைத்த உணவுகளை சுவைத்து பார்த்தனர்.
சூளகிரி,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் உள்ள 133 அரசு ஆரம்பள்ளிகளில் மிக சிறந்த முறையில் காலை உணவு 7975 மாணவர்களுக்கு வழங்கபட உள்ளது.
காலை உணவு திட்டத் தின் கீழ் சூளகிரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் வருகிற 25-ந் தேதி முதல் காலை உணவு வழங்கபட உள்ளது.
இதற்காக மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்கே மேற்பார் வையில், சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சியில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஒத்திக்கைக்காக காலை உணவு சமைக்கப்பட்டது.
இதில் பேரண்டப்பள்ளி ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் உள்ள நடநிலைப் பள்ளியில் காலை உணவு சமைத்ததை பி.டி. ஒ. விமல் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாகிருஷ்ணப்பா, செயலர் செல்வராஜ், சத்துணவு அமைப்பாளர் மணி, மகளிர் திட்ட மேற்பார்வையாளர் எல்லப்பா, எஸ்.எம்.சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சமைத்த உணவுகளை சுவைத்து பார்த்தனர்.
இதேபோல பலபகுதியில் உள்ள பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், மாதேஷ், ஜார்ஜ், இந்திரா மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆசிரியர்கள், செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி களில் உணவைருசித்து பார்த்து ஆய்வு செய்தனர்.
- பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
- மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை- தீர்த்தம் நெடுஞ்சாலையில் அமைந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளில் பேரிகை சுற்றுவட்டார பகுதியான பேரிகை, பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, கே.என்.தொட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் போதிய அளவுக்கு வகுப்பறைகள் இருப்பதாகவும், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து சிறுநீர் கழிக்க சென்று வருகின்றனர்.
இதனால் அந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி பள்ளி மாணவர்கள் காயமடைந்து வருகின்றனர்.
மேலும், பள்ளியின் அருகே உள்ள சாலையில் வேகதடை ஏதும் இல்லாததால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதில் மாணவர்கள் மீது மோதி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நவீன முறையில் கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி அருகே உள்ள சாலையில் ஒரு வேகதடையை அமைக்க வேண் டும் என்றும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலு வலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
- பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.
ஓசூர்,
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மூலமாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஓசூரில் மத்திய அரசின் சாதனை திட்டங்கள் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நேற்று தொடங்கியது.
சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பெங்களூரு சுங்க இலாகாத் துறை ஆணையாளர் பாலமுருகன் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.
விழாவில்,கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ். நாத் வரவேற்றார். முடிவில், கோவை, மக்கள் கள அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
- பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
- சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா வேப்பன–அள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் பஸ்தல்பள்ளி ஊராட்சி முடிபிநாயக்கன் பாளையம் முதல் திம்மராய–சாமி கோவில் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் ரூ.41.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய குழு தலைவர், அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், அதி–காரிகளுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் டென்சிங், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜப்பன், ஒன்றி்ய குழு உறுப்பினர் காஞ்சனா பழனி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராதா–கிருஷ்னண், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதி திம்மராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஷ், செல்வராஜ், ஊர் கவுண்டர் ரங்கநாதன், முனிகிருஷ்னா, சிவகுமார், சுவாமி மூர்த்தி, சண்முகம், சின்னபையன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






