என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "44 பேர் பிடிபட்டனர்"

    • அவர்களிடம் இருந்து ரூ.2000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • பணம் வைத்து சூதாடியதாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம் உட்பட மாவட்டம் முழுவதும் 44 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கஞ்சா விற்பனை செய்ததாக, ராயக்கோட்டை, தளி, ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.8,500 மதிப்புள்ள கஞ்சா, கஞ்சா சாக்லெட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல மாவட்டத் தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அதன்படி சாமல்பட்டி, பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல பணம் வைத்து சூதாடியதாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம் உட்பட மாவட்டம் முழுவதும் 44 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8,200 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

    ×