என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயமடைந்த தொண்டரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறும் அ.தி.மு.க துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமியை படத்தில் காணலாம்.
அ.தி.மு.க மாநாட்டிற்கு செல்லும் போது விபத்து: காயமடைந்த 3 பேரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ. ஆறுதல்
- அ.தி.மு.க. மாநாட்டிற்கு தொண்டர்கள் பேருந்துகள் மூலம் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
- வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ வுமான கே.பி.முனுசாமி காய மடைந்த 3 பேரின் இல்லங்க ளுக்கு நேரில் சென்று நலன் விசா–ரித்து ஆறுதல் கூறினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்தில் இருந்து மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிற்கு தொண்டர்கள் பேருந்துகள் மூலம் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம்செய்த மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த அன்பரசு வயது (26), புட்டாமூப்பர் கொட்டாய் பகுதியை கருணாநிதி (57), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்தி ரன் வயது (57) ஆகிய 3 பேரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகி–றார்கள்.
இவர்களை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை பொது செயலாளர் மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ வுமான கே.பி.முனுசாமி காய மடைந்த 3 பேரின் இல்லங்க ளுக்கு நேரில் சென்று நலன் விசா–ரித்து ஆறுதல் கூறினார்.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ தமிழ்செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்கள்.
இதில் மத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன், மாவட்ட இணை செயலாளர் சாகுல் அமித், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரே ஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஒன்றிய துணை செயலாளர் இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகி–ருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட இளம்பாசறை செயலாளர் முரளி பிரசாத், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் மணி, ஒன்றிய மீனவரணி செயலா ளர் முனுசாமி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் செல்வம், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திருமால், ஒன்றிய மாணவ ரணி துணை செயலாளர் சுரேஷ், இளம் பாசறை பாண்டியன்,






