என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் கொலையில் திடீர் திருப்பம்: உடந்தையாக இருந்ததால் விசாரணைக்கு பயந்து தம்பி தற்கொலை செய்தார்
- போலீசார் விசாரணை நடத்தி வந்ததால், பயத்தில் சின்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மாரியப்பனை, அவரது தம்பி சின்ராஜ், அவரது மகன் காந்தி, மருமகன் மணி ஆகியோர் கொலை செய்ய திட்டம் தீட்டி–யுள்ளனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டதிம்மன–அள்ளி அருகே உள்ள மொல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி.
இவரது சகோதரர் மாரியப்பன் (75). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.
நிலத்தகராறில் கொலை
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை தொட ர்பாக ராயக்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், சின்ராஜின் மருமகனான மணி , கிருஷ்ணகிரி பழையபேட்டை செம்பட தெருவை சேர்ந்த வெங்க டேஷ் (30) ஆகிய 2 பேர் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. உடனே 2 பேரையும் ராயக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் தற்கொலை
மாரியப்பனை வெட்டி கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததால், பயத்தில் சின்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை வழக்கில் மணியை போலீசார் கைது செய்ததால், தனது மகன் இவ்வாறு செய்து விட்டா னே என மணியின் தந்தை வெங்கட்ராமனும் கடந்த 18-ந் தேதி இரவு ஓசூர் அலசநத்தத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டதும் குறிப்பிடத்தக்கது.
திடீர் திருப்பம்
இந்த கொலை மற்றும் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் குறித்து ராயக்கோட்டை போலீசார் கைதான 2 பேர் மற்றும் மாரியப்பனின் உறவி னர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மாரியப்பன் பெயரில் சுமார் 200 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதனை தனது மகன்கள் மற்றும் சகோதாரர், சகோதரிகள் யாருக்கும் பிரித்து கொடுக்–காமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக மாரியப்பனை, அவரது தம்பி சின்ராஜ், அவரது மகன் காந்தி, மருமகன் மணி ஆகியோர் கொலை செய்ய திட்டம் தீட்டி–யுள்ளனர்.
இதற்காக மாரியப்பனை சம்பவத்தன்று மணி, வெங்கடேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்து உள்ளனர்.
இதற்கு சின்ராஜூம், நாகராஜ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ள–னர். இந்த நிலையில் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தான் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில், சினராஜ் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீ–சார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் ஒருவர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் சின்ராஜின் மகன் காந்தியை கைது செய்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்த மாற்றுத்–திறனாளி–யான நாகராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






