என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் புதிய கோ-ஆப்டெக்ஸ் நிலையம்
- ஓசூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா குத்து விளக்கேற்றி, விற்பனையை தொடங்கி வைத்தார்.
- விற்பனை நிலையத் திற்கு இந்தாண்டு விற்பனை இலக்காக ரூ.2 கோடி நிர்ணயிக் கப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் தெரிவித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பாகலூர் சாலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில், 1,900 சதுர அடியில் புதிதாக கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓசூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா குத்து விளக்கேற்றி, விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதில், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, உற்பத்தி மேலாளர் கோபி, துணை மண்டல மேலாளர் சுப்பிரமணி, விற்பனை மேலாளர் செந்தில்குமார், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு சேவைகள், ஆரணி, திருபுவனம், சேலம், கோவைபட்டு சேலைகள் சின்னாளப்பட்டி பட்டு, பருத்தி சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், பவானி ஜமக்காளம், ஆண்களுக்கான சட்டை, வேட்டி, கைலிகள், குழந்தைகளுக்கான பட்டு பாவாடைகள், சட்டைகள் மற்றும் என ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
இந்த விற்பனை நிலையத்திற்கு இந்தாண்டு விற்பனை இலக்காக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் தெரிவித்தார்.






