என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.
நடுப்பட்டி ஊராட்சியில் விவசாயிகள் பயிர்கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
- அட்மா திட்டத்தின் கீழ், நடுப்பட்டி ஊராட்சியில் கிராம விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
- வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அட்மா உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவு செய்தல் குறித்தும் விளக்கினார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ், நடுப்பட்டி ஊராட்சியில் கிராம விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமை வகித்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பயன்கள் குறித்தும், பயிர்கடன் அட்டை பெற விண்ணப்பிப்பது பற்றியும், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், சொட்டு நீர் பாசனத்தில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தும் மானிய திட்டங்கள் குறித்து விளக்க மளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார், உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அட்மா உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவு செய்தல் குறித்தும் விளக்கினார்.
இறுதியாக அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி நன்றி கூறினார். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






