என் மலர்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). விவசாயி. இவர் தனது காரை, முத்தம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது, அவரது காரில் இருந்து 2 பேர் டீசலை திருடி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து, காரில் டீசல் திருடிய காலேப்பள்ளி ராதாகிருஷ்ணன் (42), ஓசூர் மீனவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மற்றும் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் அரசனட்டி அமிர்தா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஆர்ஷியா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆர்ஷியா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை ஸ்ரீதர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவியை, குழந்தையுடன் கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அனில் (27) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்:
பர்கூர் தாலுகா பெருகோபனப்பள்ளி பக்கமுள்ள பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் மத்தூர் அருகே பாரத கோவில் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 268 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 250 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.
தளி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள சின்ன கோடிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 42). லாரி டிரைவர். இவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனிராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், செம்படமுத்தூர் கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு புளிய மரத்தின் அடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 37), கோவிந்தராஜ் (29), முனியப்பன் (35), சுப்பிரமணி (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 245 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.
மத்தூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா புது ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக சேலம், தர்மபுரியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மேகநாதன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மேகநாதன் இறந்து விட்டார். இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காருகொண்டப்பள்ளி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக காரில் வந்த கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தளி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
நாகமங்கலம் அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தரபிரதேசம் மாநிலம் காசிபூர் மாவட்டம் மர்தா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜி (வயது 39). இவர் ராயக்கோட்டை அடுத்த நாகமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 7½ லட்சம் சிக்கியது.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓலைப்பட்டி கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800 கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பறக்கும் படையினர் சரக்கு வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம், தாசில்தார் ஆஞ்சநேயலு ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த 3 பேரிடமும் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அச்சமங்கலம் பகுதியில் கிரானைட் கற்கள் வாங்க பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து பர்கூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் அருகே டி.வி.எஸ். சோதனைச்சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த பார்த்தசாரதி என்பவரை தடுத்து, காரை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி ரூ.79,300 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
-