என் மலர்
நீங்கள் தேடியது "lorry driver suicide"
கோவை:
உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் முத்துக்குமார் (வயது 33). லாரி டிரைவர். திருமணமாகவில்லை. குடிபழக்கத்துக்கு அடிமையான முத்துக்குமார் அதில் இருந்து விடுபடுவதற்காக கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சந்திரன். இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் கோவை வெள்ளகிணர் பிரிவு வன்னி நகரில் தங்கி தண்ணீர் லாரி ஓட்டி வந்தார்.
சமீபத்தில் வாங்கிய சம்பளம் அனைத்துக்கும் புதுத்துணி வாங்கினார். இதை அறிந்த அவரது தந்தை உனது தாய் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். அவருக்கு மருந்து, மாத்திரைக்கு கூட பணம் அனுப்பாமல் சம்பளம் முழுவதும் துணியே வாங்கினால் எப்படி என்று சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜி.என். மில்ஸ் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியிலேயே விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு திருமணமாகவில்லை.