என் மலர்
கிருஷ்ணகிரி
வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அவந்திகா (3), தாய் மகாலட்சுமி (25), பாட்டி இந்திரா (52) உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார், ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த வாகனத்தில் 14 மூட்டைகளில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், கிருஷ்ணகிரி அடுத்த உஸ்தலஹள்ளியை சேர்ந்த அரவிந்த் (வயது 20) என்பது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). அவருடைய நண்பர் ராஜேஷ். இருவரும் கிருஷ்ணகிரி - காட்டிநானம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜேஷ் (18) ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், பெங்களூரு - ஓசூர் சாலையில் சிப்காட் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் புகையிலை பொருட்கள் அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தர்மபுரி மாவட்டம் மிட்டனுஹள்ளியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 25), நரசிம்மன் (41) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வேனில் கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.9 ஆயிரத்து 980 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் (வயது 17) .கூலி தொழிலாளி .
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கார்த்திக், அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (18) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் காட்டு நாயனபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பிகள் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் காயமடைந்த ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாரூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே உள்ள குடிமேனஅள்ளியை சேர்ந்தவர் மணி (வயது 45), கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணி இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவரும், மூதாட்டி ஒருவரும் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 2 பேர் இறந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 40 ஆயிரத்து 847 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 326 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.
போச்சம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 48), கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பழனி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மோகன் (வயது 35). இவரது மனைவி ரம்யா (32). இவர்களுக்கு அன்மயா (9) என்ற மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மோகனுக்கு சொந்தமான லாட்ஜ் கிருஷ்ணகிரியில் இருந்தது. கடன் தொல்லை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதை விற்று விட்டார். இதையடுத்து மோகன், மத்திகிரிக்கு குடும்பத்தினருடன் வந்து, ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதில் அவருக்கு லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதில் மோகன் மன உளைச்சலுக்குள்ளாகி வேதனையுடன் இருந்து வந்தார். மேலும் குடும்பம் நடத்தவும் வருமானம் இல்லாமல் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடன் தொல்லை அதிகமாகி வந்ததால், குடும்பத்துடன் மோகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு மோகன், மனைவி ரம்யா, மகள் அன்மயா மற்றும் தாயார் வசந்தம்மா (60) ஆகியோருக்கு விஷம் கொடுத்தார். இதில் சிறிதுநேரத்தில் அவர்கள் 3பேரும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் 3 பேரும் இறந்ததை உறுதி செய்ய மோகன், வீட்டில் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நீண்ட நேரமாக மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ரம்யா, அன்மயா , வசந்தம்மா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்ததையும். மோகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மோகன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மக்களை தேடி மருத்துவம் என்ற சேவையின் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கே முன்னோடியாக மக்களை தேடி மருத்துவ திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கத்தை அறிந்து மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் என்ற சேவையின் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை போன்ற 40-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் இத்திட்டத்தில் விரைவில் சேர்க்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற இந்த புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கே முன்னோடியாக மக்களை தேடி மருத்துவ திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கத்தை அறிந்து மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் மூலம் சிகிச்சை தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களை கண்டறிந்தும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை போன்ற 40-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் இத்திட்டத்தில் விரைவில் சேர்க்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற இந்த புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி:
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
பொதுவாக தேவைகளுக்காக மக்கள்தான் அரசை தேடி செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அரசே மக்களை நாடிச் சென்று அவர்கள் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.
விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது அரசு மருத்துவமனைகளில் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற 20 லட்சம் பேரின் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட உள்ளது.
இந்த 20 லட்சம் பேரைத் தவிர, அரசு மருத்துவமனைகளுக்கும் வராத மலைவாழ் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிற மக்களும் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக திட்டம் தொடங்கப்பட்டதும், சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று மருந்துகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மற்றொரு பயனாளியின் வீட்டிற்கு சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார்.
பின்பு விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பார்வையிட்டார். பின்னர் 2 பேருக்கு மருத்துவ உபகரணங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்பு தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் மலை கிராம மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்சு சேவையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு காணொலி காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
பொதுவாக தேவைகளுக்காக மக்கள்தான் அரசை தேடி செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அரசே மக்களை நாடிச் சென்று அவர்கள் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.

விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது அரசு மருத்துவமனைகளில் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற 20 லட்சம் பேரின் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட உள்ளது.
இந்த 20 லட்சம் பேரைத் தவிர, அரசு மருத்துவமனைகளுக்கும் வராத மலைவாழ் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிற மக்களும் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக திட்டம் தொடங்கப்பட்டதும், சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று மருந்துகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மற்றொரு பயனாளியின் வீட்டிற்கு சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார்.
பின்பு விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பார்வையிட்டார். பின்னர் 2 பேருக்கு மருத்துவ உபகரணங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்பு தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் மலை கிராம மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்சு சேவையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு காணொலி காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்... உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதாவில் 17 பேர் குழு- அண்ணாமலை அறிவிப்பு
போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்தவர் நாகராஜ் என்கிற நாகேஷ் (வயது 56). சமையல் மாஸ்டர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.