என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த திலீப் குமார் (வயது 20), கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ஓசூர் அருகே இரவில் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் சாமந்தி பூ தோட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு, ரசித்து செல்கின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள மத்தம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறார். அவர் கொல்கத்தாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்வர்யா-2 என்ற சாமந்தி பூ செடிகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ளார். இந்த ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ நடவு செய்த 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. இந்த பூக்களுக்கு மலர் சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

    மலர் செடிகளுக்கு பகல் நேர வெளிச்சம் மட்டுமே அதன் வளர்ச்சிக்கு போதுமானது. ஆனால் ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ செடிக்கு பகலிலும், இரவிலும் வெளிச்சம் தேவைப்படுகிறது. அப்போதுதான் செடிகள் நல்ல வளர்ச்சியை பெறும் என கூறப்படுகிறது. இதனால் இந்த பூச்செடிகளை நடவு செய்துள்ள விவசாயி தனது ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ தோட்டத்தை இரவிலும் மின் விளக்குகளை ஒளிரவிட்டு ஜொலிக்க செய்துள்ளார்.

    இதற்காக தன்னுடைய 75 சென்ட் விவசாய தோட்டத்தில் 160 எல்.இ.டி. விளக்குகளை பொருத்தியுள்ளார். அதேபோல மற்றொரு ஒரு ஏக்கர் மலர் தோட்டத்தில் 150 விளக்குகளை எரிய விட்டுள்ளார். இரவு முழுவதும் ஜொலிக்கும் இந்த விளக்குகளின் ஒளியில் இருந்து மலர் செடிகள் ஒளியை பெறுகின்றன. இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஐஸ்வர்யா-2 சாமந்திப்பூ தோட்டத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இரவு நேரத்தில் இந்த விவசாய தோட்டம் அனைவரது பார்வையையும் கவர்ந்து வருகிறது.

    இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், இந்த சாமந்தி பூ தோட்டத்திற்கு மின்சார கட்டணம் மற்றும் பாதுகாப்பு செலவுகள் அதிக அளவில் வருகிறது. இந்த பூக்கள் பூக்க தொடங்கியதும் வாரம் ஒரு முறை என 6 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம் என்றார்.
    சிங்காரப்பேட்டை அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 17). இவன் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தான். கடந்த சில நாட்களாக சிறுவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளான். இதை சிறுவனின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மோகன்தாஸ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தான். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவனை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாரி டயர்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இந்தநிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் 10 டயர்கள், வேன்களின் 9 டயர்கள் மற்றும் டிஸ்க்குகள் திருடப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தியதில், டயர்களை திருடியது திருப்பத்தூர் மாவட்டம் துறிஞ்சிகுப்பத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது 28), சின்னதுரை (38), திருவண்ணாமலை மாவட்டம் பலக்கானூரை சேர்ந்த மகேந்திரன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, லாரி டயர்களை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 22 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 590 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 40 ஆயிரத்து 937 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 329 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி விருதன்கொட்டாய் அருகே உள்ள பெத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெத்ததாளப்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் மேக்னம்பட்டியை சேர்ந்தவர் புவியேந்திரன் (வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் பெத்ததாளப்பள்ளி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையை கவனிக்காமல் சென்ற புவியேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மதகொண்டப்பள்ளி-ஓசூர் சாலையில் நாகொண்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தபகுதியில் நிறுத்தி இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசன்னா பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில் பெண்ணிடம் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள நல்லப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா (வயது 46). சம்பவத்தன்று இவர் பெங்களூருவில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே பஸ் வந்த போது, தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பரிமளா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாரி மீது வேன் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கதிரேபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). சரக்கு வேன் டிரைவர். சம்பவத்தன்று அவர் கோபசந்தரம் பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வேனை ஓட்டிச் சென்றார். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புகையிலை பொருட்கள் கடத்திய விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் பஸ் நிலையத்தில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த சென்னை மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த சேத்தன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதே போல், தேன்கனிக்கோட்டை போலீசார் ஒசஅள்ளி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே ஊரை சேர்ந்த மணி (50) என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
    மத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூரை அடுத்த சாளூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மனைவி சின்னக்குழந்தை (வயது50). சம்பவத்தன்று இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த சின்னக்குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×