என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy suicide"

    • மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கண்டல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதி தங்கச்சன்-சிந்து. இவர்களது மகன் ஆதித்தன் (வயது13), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த சிறுவன், டி.வி.யை ஆன் செய்வதற்காக ரிமோட்டை கேட்டார். ஆனால் டி. வி. ரிமோட்டை தாய் கொடுக்கவில்லை.

    இதனால் தாயிடம் கோபித்துக்கொணடு சிறுவன் ஆதித்தன் தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான். இரவு ஆகியும் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. கோபத்தில் அறைக்குள் இருப்பான் என்று கருதி குடும்பத்தினர் யாரும் அவனது அறைக்கு செல்லவில்லை. மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுவன் ஆதித்தன் தூக்கில் பிணமாக தொங்கினான். டி.வி. ரிமோட்டை தாய் தராத கோபத்தில் சிறுவன் தூக்குப்போடடு தற்கொலை செய்துகொண்டான்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்தி விட்டான்.
    • கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கிருஷ்ணகுமார்(வயது 15). இவன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பின்னர் படிப்பை நிறுத்திவிட்டான்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்து மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 வருடமாக கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×