என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே சரக்கு வாகனம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் ஜூஜூவாடி எஸ்.எல்.வி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 46). இவர் சொந்தமாக கிரேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு சரக்கு வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்து பாபு சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரிகை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பீரேஸ்வரா நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 37). இவர் பேரிகை அருகே சொன்னேபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார். இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த முனிராஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதலியை தொழிலாளி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி பார்வதி (வயது40). இவர்களுக்கு சர்மா, சதீஷ் குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பார்வதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (45), இவருக்கு பார்வதி தங்கை உறவு முறை ஆகும். முருகனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவர் தனியாக வசித்து வந்தார்.
முருகன், பார்வதி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். கணவன் இல்லாமல் தனியாக தவித்து வந்த பார்வதிக்கு அவ்வப்போது பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பார்வதி, தங்கை உறவு முறை என்று கூட பாராமல் உல்லாசமாக இருந்து வந்தார். கடந்த 10 வருடங்களாக இவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் பார்வதிக்கு, முருகனுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு கசந்தது. இதனால் வேறு ஒரு வாலிபரிடம் பார்வதி நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த முருகன் பல முறை பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரிடம் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, மார்பு, முதுகு, தலை உள்பட பல இடங்களில் பார்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த பார்வ தியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து முருகன் மத்தூர் போலீசில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறொரு வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலியை தொழிலாளி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி பார்வதி (வயது40). இவர்களுக்கு சர்மா, சதீஷ் குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பார்வதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (45), இவருக்கு பார்வதி தங்கை உறவு முறை ஆகும். முருகனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவர் தனியாக வசித்து வந்தார்.
முருகன், பார்வதி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். கணவன் இல்லாமல் தனியாக தவித்து வந்த பார்வதிக்கு அவ்வப்போது பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பார்வதி, தங்கை உறவு முறை என்று கூட பாராமல் உல்லாசமாக இருந்து வந்தார். கடந்த 10 வருடங்களாக இவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் பார்வதிக்கு, முருகனுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு கசந்தது. இதனால் வேறு ஒரு வாலிபரிடம் பார்வதி நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த முருகன் பல முறை பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரிடம் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, மார்பு, முதுகு, தலை உள்பட பல இடங்களில் பார்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த பார்வ தியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து முருகன் மத்தூர் போலீசில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறொரு வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலியை தொழிலாளி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று குட்டையில் ஆனந்தக் குளியல் போட்ட காட்சியை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு அடுத்துள்ள வண்ணாத்திப் பட்டி கிராமம் அருகே சாலை யோரத்தில் வனப்பகுதியில் தண்ணீர் குட்டை உள்ளது.
தற்போது கோடை காலம் வெயில் துவங்கியுள்ளதால் வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடி வருகின்றன. நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று குட்டையில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ச்சியுடன் விளையாடியது.
அதனை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 419 பேர் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகள் என மாவட்டத்தில் 8 நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும், ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஹள்ளி ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் என மொத்தம் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. முதல் நாளான 28-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான கடந்த 29-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 31-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 19 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 2 பேரும், பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் தலா ஒருவரும் என மொத்தம் 27 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
கடந்த 1-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 8 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை மற்றும் ஊத்தங்கரையில் தலா ஒருவரும் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 26 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 7 பேரும், பர்கூர் மற்றும் நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளில் தலா 2 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒருவரும் என மொத்தம் 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூர் மாநகராட்சியில் 116 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 99 பேரும், பேரூராட்சிகளில் பர்கூரில் 14 பேரும், தேன்கனிக்கோட்டையில் 52 பேரும், காவேரிப்பட்டணத்தில் 48 பேரும், கெலமங்கலத்தில் 39 பேரும், நாகோஜனஅள்ளியில் 3 பேரும், ஊத்தங்கரையில் 48 பேரும் என மொத்தம் 419 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-வது நாளான நேற்று வரை மொத்தம் 500 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் கடைசி நேரத்தில் தி.மு.க. வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த தி.மு.க. காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். அதே போல தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீரென்று மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 29 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் த.மு.மு.க.வும் போட்டியிடுகிறது. தி.மு.க.வில் நிர்வாகிகள் சில பேருக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர தி.மு.க.வை சேர்ந்த ஒருவர், நகராட்சியின் 8-வது வார்டில் நேற்று சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இதே போல நகராட்சியின் 7-வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி நகராட்சியின் 9-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தவர் திடீரென மாற்றப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதால் தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட தக்கட்டி செல்லும் சாலையில் உள்ள உப்பராணி காப்பு காட்டில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள செடி கொடிகளின் நடுவில் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் தகவலையடுத்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்கள், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே யானை உடல் புதைக்கப்பட்டது. யானை உடல்நலக்குறைவால் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த வாரம் அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சி காப்புக் காட்டில் ஆண் யானை ஒன்று மற்ற யானையுடன் மோதிக்கொண்டதில் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் அடிக்கடி யானைகள் பலியாவதை சமூக ஆர்வலர்கள் வேதனை கூடிய அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் யானைகள் பலியாவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்பட முத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மனைவி அம்சவேணி (வயது 24), இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது இவர்களுக்கு சிவன்யா என்ற மகளும் கவினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடிகுடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சவேணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 714 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆயிரத்து 200ஆகும். இதில் 52 ஆயிரத்து 190 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 368 ஆக உள்ளது.
கிருஷ்ணகிரியில் குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி நமாஸ்பாறை அருகே கடந்த 26-ந் தேதி நள்ளிரவில் வேகமாக சென்ற ஈச்சர் லாரியை கிருஷ்ணகிரி போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 6.5 டன் குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரிந்தது.
இதில் வரட்டனப்பள்ளியைச் சேர்ந்த ஜான் ஜோசப்(வயது30), கிருஷ்ணகிரி மன்னன்(23), ஆகாஷ்(21), யுவராஜ்(20), உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட குட்கா பொருட்களின் மதிப்பு, 60 லட்ச ரூபாய் ஆகும். கன்டெய்னர் லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி மோரமடுகு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(32), முருகன்(30), கார்த்தி(23), மவுலி(26), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வரட்டனபள்ளி ஜான் ஜோசப் மற்றும் கிருஷ்ணகிரி மோரமடுகு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் நகைக்கடை தம்பதியிடம் 16 பவுன், 1 கிலோ வெள்ளியை திருடிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன்லால் (வயது 44). இவர் வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு மோகன்லால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடையை பூட்டினர். பின்னர் தங்களது கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தங்களது பையை போட்டனர். அந்த பையில் 130 கிராம் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி இருந்தது.
அப்போது கணவன்-மனைவி இருவரும் சிறிதுநேரம் பேசி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென நகைபையை நைசாக அபேஸ் செய்து தப்பி சென்று விட்டனர்.
சிறிதுநேரம் கழித்து வந்த மோகன்லாலும், அவரது மனைவியும், மோட்டார் சைக்கிளில் மாட்டியிருந்த நகை பை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்து நகையை திருடிச்சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நகைக்கடை தம்பதியிடம் நகை,வெள்ளியை மர்ம வாலிபர்கள் அபேஸ் செய்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஓசியில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள உளியாளம் கிராமத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, தளி பகுதியை சேர்ந்த பாபு என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பாகலூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மல்லிகார்ஜூன் என்ற 2 பேர், ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிலையத் திற்கு சென்றனர். அப்போது, அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும், அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு, ஓசியில் பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர் மறுக்க வே போதை நபர்கள் இருவரும், அந்த ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் தகராறு முற்றியதால், பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் பாபு, பிரச்சினையில் தலையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையில் இருந்த அந்த 2 நபர்களும்,பாபுவை ஜன்னல் வழியாக இழுத்து தாக்கியதுடன், அவரது கையையும் கத்தியால் குத்தி காயப்படுத்தினர். அப்போது அவரை காப்பாற்ற சென்ற பெட்ரோல் நிலைய ஊழியர் யாரப் (46) என்பவரையும் போதை நபர்கள் தாக்கினர். இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகின.
காயமடைந்த பாபு மற்றும் யாரப் ஆகிய இருவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிபோதையில் பெட்ரோல் நிலைய மேலாளர் மற்றும் ஊழியர் ஆகியோரை தாக்கிய போதை நபர்கள் இருவரையும் பாகலூர் போலீசார் விசாரித்து, கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
பெட்ரோல் நிலைய மேலாளர் மற்றும் ஊழியரை போதை நபர்கள் தாக்கும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






