என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 419 பேர் வேட்பு மனு தாக்கல்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 419 பேர் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகள் என மாவட்டத்தில் 8 நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும், ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஹள்ளி ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் என மொத்தம் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 

    இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. முதல் நாளான 28-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான கடந்த 29-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 31-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 19 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 2 பேரும், பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் தலா ஒருவரும் என மொத்தம் 27 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

    கடந்த 1-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 8 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை மற்றும் ஊத்தங்கரையில் தலா ஒருவரும் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2-ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் 26 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 7 பேரும், பர்கூர் மற்றும் நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளில் தலா 2 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒருவரும் என மொத்தம் 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஓசூர் மாநகராட்சியில் 116 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 99 பேரும், பேரூராட்சிகளில் பர்கூரில் 14 பேரும், தேன்கனிக்கோட்டையில் 52 பேரும், காவேரிப்பட்டணத்தில் 48 பேரும், கெலமங்கலத்தில் 39 பேரும், நாகோஜனஅள்ளியில் 3 பேரும், ஊத்தங்கரையில் 48 பேரும் என மொத்தம் 419 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-வது நாளான நேற்று வரை மொத்தம் 500 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    Next Story
    ×