என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்
கிருஷ்ணகிரி நகராட்சியில் கடைசி நேரத்தில் தி.மு.க. வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த தி.மு.க. காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். அதே போல தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீரென்று மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 29 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் த.மு.மு.க.வும் போட்டியிடுகிறது. தி.மு.க.வில் நிர்வாகிகள் சில பேருக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர தி.மு.க.வை சேர்ந்த ஒருவர், நகராட்சியின் 8-வது வார்டில் நேற்று சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இதே போல நகராட்சியின் 7-வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி நகராட்சியின் 9-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தவர் திடீரென மாற்றப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதால் தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






