என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்பட முத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மனைவி அம்சவேணி (வயது 24), இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது இவர்களுக்கு சிவன்யா என்ற மகளும் கவினேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடிகுடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது,  இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சவேணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×