என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் குட்டையில் குளியல் போடும் ஒற்றை யானை
    X
    தண்ணீர் குட்டையில் குளியல் போடும் ஒற்றை யானை

    அஞ்செட்டி அருகே குட்டையில் ஆனந்த குளியல் போட்ட ஒற்றை யானை

    அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று குட்டையில் ஆனந்தக் குளியல் போட்ட காட்சியை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு அடுத்துள்ள வண்ணாத்திப் பட்டி கிராமம் அருகே சாலை யோரத்தில் வனப்பகுதியில் தண்ணீர் குட்டை உள்ளது.

    தற்போது கோடை காலம் வெயில் துவங்கியுள்ளதால் வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடி வருகின்றன. நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று குட்டையில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ச்சியுடன் விளையாடியது.

    அதனை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். 
    Next Story
    ×