என் மலர்
கிருஷ்ணகிரி
- தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து 75 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவிற்கு பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி. சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்பரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் கடும் சோதனைக்கு பிறகே தொண்டர்களை உள்ளே அனுமதித்தனர்.
தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அடகிசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது36). அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் ஆகிய இவர்கள் இருவரும் நேற்று மது அருந்த இருசக்கர வாகனத்தில் காமையூர் அருகே சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் நின்று மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களது உறவினர்களான நாகேஷ், மோகன், திம்மராயன் ஆகியோரும் அங்கு வந்தனர். இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து மதுபோதையில் இருந்த மோகன், வெங்கடேசனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரணி, கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.
- காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரிக்கு நாளை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிறார்.
பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
பின்னர், கிருஷ்ணகிரியில்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை மதியம் 3 மணி அளவில் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
- போலீசார் செந்தூர் பாண்டியன் (29), ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி சென்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியன் (29), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.
- ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.
- இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காரவல்லி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது37). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
- வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர்.
பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் மற்றும் நிர்வாக இயக்குனர் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவினை முன்னிட்டு நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் ஆசிரியை கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியப்பெரு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
- அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவி மீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். அதன் மூலம் குடும்பமும், நாடும் சிறக்கும். அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கூடுதல் வழக்கறிஞர் சவுந்தரி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது பெண்கள் எதையும் தாங்கும் மனவலிமை பெற வேண்டும் என்று பேசினார்.
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரிமளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவிகள் குறிக்கோளை அடைய கடுமையாக உழைத்திட வேண்டும் என்றார். பெண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் மீனாட்சி தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து மாணவிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இதில் கவிதை, கட்டுரை, பேச்சு ,ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவி கிருத்திகா, கணினி அறிவியல் துறைத்தலைவி ராஜலட்சுமி ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
இதில் அனைத்து துறை பேராசிரியைகளும் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியை கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.
- பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- (12-ந்தேதி) நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்ள வேண்டும்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம், தளி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநகர செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார்,மாநகர துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிகுமார், பகுதி செயலாளர் ஜி.ராமு மற்றும் மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தீர்மானங்களை விளக்கி, எஸ்.ஏ. சத்யா பேசினார்.
கூட்டத்தில், முன்னதாக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை, இளைஞர் எழுச்சி நாளாக 45 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாடுவது என்றும் ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் மாநகரத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்றி மாபெரும் வெற்றிக்கு உழைத்த மாநகர, பகுதி நிர்வாகிகளுக்கும், அதற்கு வாய்பளித்த மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.க்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கழகத்தின் அறிவுறுத்த லின்படி, உடனடியாக பி.எல்.ஏ-2 மற்றும் பூத் கமிட்டிகளை மறு சீரமைத்து விரைவாக வழங்குவது எனவும், மாநகர தி.மு.க. சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12-ந்தேதி) நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்வது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்.
- உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பாரத் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்' என்கிற கோட்பாட்டை அடிகோலிட்டு மகளிர் யாவரும் இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் விமானம், ராணுவம், மருத்துவம், தொழில்துறை. கல்வித்துறை போன்ற துறைகளில் சாதனை பெற்று வருகின்றனர் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்கினார். பெண்பால் ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பெண்பால் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசாக கேடயம் வழங்கி பாராட்டினார்.
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி தலைமை தாங்கினார். மேலும் பாரத் கல்வி குழுமங்களின் செயலர் சந்தோஷ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும் பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில் புனிதா, அனுராதா ஆகியோர் நன்றி கூறினர்.
- மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது.
- உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா திட்ட விளக்கவுரையாற்றினார். தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள, நல உதவிகள் பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்து கூறினார்கள்.
முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-
தொட்டமஞ்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிட மிருந்து கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான 273 மனுக்களுக்கு இன்று ரூ.9 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மலைகிராம பகுதியில் கல்வியறிவு 57 சதவிகிதமாக உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் தளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்நுட்ப கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் தங்களது குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.
மேலும், இம்மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இக்குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும். உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 816 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர் (நில அளவை) சேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், விமல்ரவிக்குமார், தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் சந்திரன், முருகன், கணேசன், வருவாய் ஆய்வாளர்கள் ரேணுகா, ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பேசிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- கெலமங்கலம் போலீசார் கிருஷ்ணகுமார், மாதேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேசா காலனியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது21). கட்டிட மேஸ்திரி.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்க ளான கிருஷ்ணகுமார் (23), மாதேஷ் (21) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி நிரஞ்சனை இரண்டு நண்பர்களும் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் நிரஞ்சனை தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து நிரஞ்சன் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் கிருஷ்ணகுமார், மாதேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- திருவிழாவில் இருந்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடி சென்ற பெண்ணை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது23). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஓசூரில் நடைபெற்ற தேர் திருவிழாவில் இருந்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடி சென்ற பெண்ணை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த பெண் தருமபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி (41) என்பது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.






