என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் விழாவில் பிக்பாக்கெட்  அடித்த அரூர் பெண் கைது
    X

    கோவில் விழாவில் பிக்பாக்கெட் அடித்த அரூர் பெண் கைது

    • திருவிழாவில் இருந்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடி சென்ற பெண்ணை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது23). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஓசூரில் நடைபெற்ற தேர் திருவிழாவில் இருந்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை திருடி சென்ற பெண்ணை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த பெண் தருமபுரி மாவட்டம், அரூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி (41) என்பது தெரியவந்தது.

    இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

    Next Story
    ×