என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம்
- பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- (12-ந்தேதி) நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்ள வேண்டும்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம், தளி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநகர செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார்,மாநகர துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிகுமார், பகுதி செயலாளர் ஜி.ராமு மற்றும் மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தீர்மானங்களை விளக்கி, எஸ்.ஏ. சத்யா பேசினார்.
கூட்டத்தில், முன்னதாக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை, இளைஞர் எழுச்சி நாளாக 45 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாடுவது என்றும் ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் மாநகரத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்றி மாபெரும் வெற்றிக்கு உழைத்த மாநகர, பகுதி நிர்வாகிகளுக்கும், அதற்கு வாய்பளித்த மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.க்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கழகத்தின் அறிவுறுத்த லின்படி, உடனடியாக பி.எல்.ஏ-2 மற்றும் பூத் கமிட்டிகளை மறு சீரமைத்து விரைவாக வழங்குவது எனவும், மாநகர தி.மு.க. சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12-ந்தேதி) நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்வது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.






