என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இந்த பணி இம்மாவட்டத்தில் தற்போது 76 சதவீதம் முடிவடைந்துள்ளது.
    • வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ட ருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த பணி இம்மாவட்டத்தில் தற்போது 76 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியினை துரிதப்படுத்தும் நோக்கில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தேதிகளில் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வீடுவீடாக சென்ற களப்பணி மேற்கொண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று 6பி படிவத்தில் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வார்கள்.

    அலுவலர்கள் இப்பணி தொடர்பாக படிவம் 6பி சேகரிக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும், வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பொதுமக்கள் கீழ்காணும் இணைய வழிகள் மூலம் தங்கள் வீடுகளிலிருந்தே இணைய வழியில் வாக்காளர்களே நேரடியாக இணைக்கலாம்.

    மேலும், இணைக்க தவறியவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது படிவம் 6பி-ஐ சமர்ப்பித்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் பதிவு செய்துகொள்ளலாம்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக ்கொள்ளலாம்.

    இவ்வாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
    • இது தொண்டர்களுக்கான கட்சி.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான்.

    மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது.

    தி.மு.க. அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும்.

    அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்லும் உங்களுக்கான அரசாக பா.ஜனதா உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான்.
    • வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

    வடமாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகாலயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம், மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும்.

    தமிழகத்தில் பா.ஜனதா தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். பா.ஜ.க.வால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது.

    நான் ஏற்கனவே கூறியது போல், தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான். தற்போது தி.மு.க. குடும்ப அரசியல் என்பதற்கு, முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது.

    தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பா.ஜ.க. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பா.ஜ.க. தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆவத்துவாடி, ஊத்தங்கரை ஒட்டம்பட்டி (புதூர்புங்கனை), போச்சம்பள்ளி சாலூர்(ரங்கம்பட்டி), பர்கூர் ஆம்பள்ளி, சூளகிரி அத்திமுகம், ஓசூர் பூனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை சென்னமாலம்(கக்கதாசம்), அஞ்செட்டி தாலுகா பிலிகுண்டு ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

    எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் திட்டபணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
    • செல்லக்குமார் எம்.பி., எம்எல்ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகளுக்கு பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.

    இதையடுத்து நேற்று போச்சம்பள்ளி தாலுகா பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் நெடுகை 15.95 கி.மீட்டரில் இடது வலது புறத்தில் ஒரு புதிய வழங்கு கால்வாய் வெட்டி, பெண்ணையாற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகள் ஆகியவற்றிற்கு கொண்டு சென்று பயன்பெறும் வகையில் ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் திட்டபணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    செல்லக்குமார் எம்.பி., எம்எல்ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ., நரசிம்மன், ஒன்றிய குழு தலைவர்கள் மத்தூர் விஜயலட்சுமி பெருமாள், ஊத்தங்கரை உஷாராணி குமரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரஜினிசெல்வம், நடராஜன், சந்தோஷ், அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் லதா, நந்தினி, தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் வசந்தரசு, சாந்தமூர்த்தி, குமரேசன் மற்றும் டாக்டர்.தென்னரசு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பச்சை குளத்தின் வளாகத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பச்சை கிளிகள் வாழ்கின்றன.
    • மேளதாளங்களின் இசை, பொதுமக்களின் சப்தம் உள்ளிட்ட கடும் இரைச்சலால் இரவில் மரங்களில் தஞ்சமடைய சென்ற பச்சைக்கிளிகள் பல மணி நேரம் பரிதவித்தன.

    ஓசூர்,

    ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக ஓசூர் தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பச்சை குளத்தின் வளாகத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பச்சை கிளிகள் வாழ்கின்றன. தினம்தோறும் அதிகாலை நேரத்தில் மரங்களிலிருந்து வெளியேறும் இவை, உணவு தேடி விட்டு மாலை நேரத்தில் மீண்டும் அந்த மரங்களில் தஞ்சமடையும், இரவில் அந்த மரங்களில் நிம்மதியாக உறங்கும், ஆனால் நேற்று, விழாவுக்கு வந்த மக்கள் கூட்டத்தால் பச்சைக்கிளிகள் மரங்களில் தஞ்சமடையாமல் பரிதவித்து மரங்களை சுற்றி சுற்றி வட்டமடித்தன.

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் திருவிழாவுக்காக தேர்ப்பேட்டை பகுதி முழுவதும் கடைகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைவீதிகளிலும் கோயிலுக்கும் தெப்ப திருவிழாவுக்கும் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

    மேளதாளங்களின் இசை, பொதுமக்களின் சப்தம் உள்ளிட்ட கடும் இரைச்சலால் இரவில் மரங்களில் தஞ்சமடைய சென்ற பச்சைக்கிளிகள் பல மணி நேரம் பரிதவித்தன. தினந்தோறும் நிம்மதியாக இரவில் தூங்கும் கிளிகள் கூட்டம் மரங்களின் அருகே நீண்ட நேரம் கீச், கீச் என சப்தமிட்டவாறு சுற்றித்திரிந்தன.

    நீண்ட நேரத்துக்கு பின்பு,தெப்ப உற்சவம் முடிந்து மக்கள் கூட்டம் அப்பகுதியில் குறைந்த பின்னரே பச்சை கிளிகள் மரங்களில் தஞ்சமடைந்து நிம்மதியாக குஞ்சுகளுடன் உறக்கத்திற்கு சென்றன.

    • நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 7-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு தொடங்கி விடிய, விடிய தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுமார் 20 சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, தேர்பேட்டை வீதிகளில் மேள, தாள வாத்தியத்துடன் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியை வைத்து, மேள, வாத்தியத்துடன் குளத்தை சுற்றி 3 முறை தெப்பம் சென்றது. அப்போது பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எழுப்பினர். மேலும் பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு . தெப்ப உற்சவத்தை தரிசித்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மதுபோதையில் இருந்த மோகன், வெங்கடேசனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
    • சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அடகிசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது36). அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் ஆகிய இவர்கள் இருவரும் நேற்று மது அருந்த இருசக்கர வாகனத்தில் காமையூர் அருகே சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் நின்று மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களது உறவினர்களான நாகேஷ், மோகன், திம்மராயன் ஆகியோரும் அங்கு வந்தனர். இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து மதுபோதையில் இருந்த மோகன், வெங்கடேசனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரணி, கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
    • பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    கிருஷ்ணாபுரம்,

    சுருதி ரிசோர்ஸ் செனட்டர் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் சுருதி ரிசோர்ஸ் சென்டரின் இயக்குனர் மகாதேவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் மகாதேவய்யா கூறுகையில், பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    இதில் குறிப்பாக சுருதி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிராமங்கள் அவர்களுடைய வளர்ச்சிக்காக வங்கிகளின் பயன்பாடும், தொழில்களின் பயன்பாடும், பயிற்சிகளின் பயன்பாட்டையும் விளக்கி பேசினார்.

    இந்த விழாவிற்கு கிருஷ்ணாபுரம், கம்பை நல்லூர் மற்றும் ஒடசல்பட்டி பகுதியில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், எழுத்தாளர் மற்றும் பிரதிநிதிகள், நிறுவனத்தில் பணிபுரியும் சரஸ்வதி, ராதா, சுமதி, சுருதி ரிசோர்ஸ் சென்டரின் செயற்குழு உறுப்பினர்களாகிய லட்சுமி, எல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் செயற்குழு உறுப்பினர்கள் நன்றி கூறினர்.

    • குடும்ப பிரச்சினையில் காரணமாக நேற்று விஜயகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மோங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது45). இந்த நிலையில் குடும்ப பிரச்சினையில் காரணமாக நேற்று விஜயகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
    • தொடர்ந்து பொதுக்கூ ட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சி அலுவ லகத்தை திறந்து வைக்க இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமை க்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலும் கிருஷ்ணகிரி குந்தா ரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து 75 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திரு வள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவ லகத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொதுக்கூ ட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விழாவிற்கு பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல். முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி. சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் அன்பரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. இதனால் கடும் சோதனைக்கு பிறகே தொண்டர்களை உள்ளே அனுமதித்தனர்.

    தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் என நட்டா பேசினார்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வருகை தந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து நட்டா பேசியதாவது:-

    தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக ஆட்சி. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

    ஜம்மு- காஷ்மீர், உத்தர பிரதேசம் தொடங்கி தமிழகம் வரை மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×