என் மலர்
கிருஷ்ணகிரி
- மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
- இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகளில் பயிலும் 10,167 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 118 பள்ளிகளில் பயிலும் 14,245 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 24,412 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரியில் 48, ஓசூரில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உள்ள மேஜைகள் மீது மாணவர்களின் பதிவு எண்ணை எழுதும் பணியில் ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவ, மாணவிகள் 36 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 12,272 மாணவ, மாணவிகள் 51 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 20,159 மாணவ, மாணவிகள் 87 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
- அரிசி மற்றும் பிக் அப் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் சுமதிஸ்ரீ, ஆனந்த், சக்திவேல் ஆகியோர் கெலமங்கலம் ராயக்கோட்டை சாலையில் உள்ளுக்குறிக்கி கிராமத்தில் உள்ள மசூதி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட, 50 சாக்கு பைகளில் 2.50 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை பதுக்கி வைத்திருந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த நஞ்சப்பன்(41), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தொட்டதிம்மனஅள்ளி செல்வராஜ் (46) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் அரிசி மற்றும் பிக் அப் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வேனில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை கொல்லப்பட்டி, பிள்ளையார்அக்ரஹாரம், புல்லட்டி, உள்ளுகுறுக்கி சுற்றுவட்டார கிராமங்களில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கர்நாடகாவிற்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ-110க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1800 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தேங்காய்ப் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைப் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.105.90க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ-110க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் வருகிற ஜூலை மாதம் 31&ந் தேதி வரையிலான காலம் வரை நடைபெறவுள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மொத்தம் 81.89 கி.மீ நீளத்திற்கு 19 பணிகள் ரூ.312 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த 14 சாலை பணிகளும், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம், கே.பூசாரிப்பட்டி முதல் பெரிய கோட்டப்பட்டி வரை திட்டம் சாராப்பணிகள், சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.62 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் மொத்தமாக 1738.139 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாநில நெடுஞ்சாலைகள் 279.953 கி.மீ., மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் 262.755 கி.மீ. மற்றும் இதர மாவட்ட சாலைகள் 1190.431 கி.மீ சாலைகள் ஆகும்.
2022-23-ம் நிதியாண்டில், ஒருங்கிணைக்கப்பட்ட சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் நகரமான ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை 33.430 கி.மீ நீளம், ரூ.260.50 கோடி மதிப்பில் 5 பணிகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளும், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ. நீளமுள்ள 3 - மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே போல், மாவட்ட சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு கிருஷ்ணகிரி அணை சாலை, பர்கூர் சிந்தகம்பள்ளி சாலை, பண்ணந்தூர், பந்தாரஹள்ளி, காரப்பட்டு, கல்லாவி, போச்சம்பள்ளி, கப்பல்வாடி, ஒரப்பம், செந்தாரப்பள்ளி மற்றும் மலைகிராமமான பெட்டமுகிலாளம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.33 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 11 சாலைப் பணிகள் என மொத்தம் 81.89 கி.மீ நீளத்திற்கு 19 பணிகள் ரூ.312 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதே போல் 2022-23-ம் ஆண்டில் திட்டம் சாரா பணிகள் மூலம், பூசாரிப்பட்டி, பெரியகோட்டப்பள்ளி, கரடிஹள்ளி, நல்லூர், வரட்டணப்பள்ளி, வெலகலஹள்ளி, பீர்பள்ளி, அத்திகானுர், போச்சம்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 35.70 கி.மீ. நீளமுள்ள 14 சாலைகள் ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த 14 சாலை பணிகளும், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெயகுமார், உதவிக் கோட்டப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவிப்பொறியாளர்கள் ரியாஸ் முகமது, பிரவீன்குமார் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.
- உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
- முடிவில்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பார்வதி நன்றி கூறினார்.
ஓசூர்,
ஓசூரில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
ஓசூர் சாந்தி நகர் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகியுமான கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி கஸ்தூரி தேவி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி மகளிர் தின கருத்துரையாற்றினார். இதில்,மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி, ஓசூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாரெட்டி,.ஆசிரியர்கள் சங்க நிர்வாகி பத்மநாபன்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பார்வதி நன்றி கூறினார்.
- 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.
- பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர்.
ஓசூர்,
சேலம் மத்திய சேவைத்துறை மற்றும் ஜி.எஸ்.டி ஆணையரகமும், ஓசூர் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கமும் (ஹோஸ்டியா) இணைந்து, 2023- 24 ஆம்ஆண்டிற்கான, மத்திய வரவு செலவு அறிக்கையில் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி மற்றும் 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.
ஓசூர் ஹோஸ்டியா அலுவலத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி.துறை ஆணையர் சுதா கோக்கா, உதவி ஆணையர் ஜெய சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு 2023- 24 நிதியாண்டு அறிக்கையில் ஏற்பட இருக்கும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் சரக்கு மற்றும் ஜி.எஸ்.டி. சம்பந்தமான மாற்றங்கள் மற்றும் 49 -வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும்,வர்த்தக மற்றும் தொழிற்துறை
பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர். நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி. துறை இணை ஆணையர் ராஜேஷ் வி.ஷெல்கே, ஹோஸ்டியா சங்க தலைவர் கே.வேல்முருகன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைக்கான கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் நடத்தினர்.
உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அங்கீகரித்த லண்டனை தலைமை இடமாக கொண்ட வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தினர் அதற்கான சான்றிதழை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினரிடம் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைவரையும் பாராட்டினார்.
- கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் விழாவில் தொடக்க உரையாற்றினார். அவர் பேசும் போது பெண்கள் நன்கு கல்வி கற்று, தனித்திறன் வளர்க்கும் பயிற்சி பெற்றவளாக தேர்வில் தேர்வாகி உலகம் வியக்கும் உன்னத பெண்களாக உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.
விழாவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர் பேசும்போது பெண்கள் என்றுமே வலிகளை தாங்கும் வல்லனை கொண்டவர்களாக விளங்கு கிறார்கள்.
நவீனயுகத்தில் கல்வி, தன்னம்பிக்கை ஆகியவற்றை ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும் என்றார்.
உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதாகவும், அதை போல மாணவிகளும் வளர வேண்டும் என்றார்.
விழாவில் துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவிகள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- வித்யா நேற்று வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர், மார்ச்.11-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள லேடர்தட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் ஆந்திரம் மாநிலம், குண்டூர் பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது27). இவர்களுக்கு சுபாஷினி, சஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளன.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட வித்யா நேற்று வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
- மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை கோட்டை உருது நடுநிலைப்பள்ளி, மற்றும் அண்ணாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
இந்த முகாமில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றம் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர் என அனைவருக்கும் காய்ச்சல், இரத்த அழுத்தம், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்ளுக்கு மருந்துகள், மாத்திரைகள், மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து க்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திடவேண்டும். குடிநீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும்.
இந்த சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமில் 36 நடமாடும் மருத்துவ குழு மற்றும் பள்ளி சிறார்களுக்காக சிறப்பு குழு என 400 மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் இனியள் மண்டோதரி, தாமரைதென்றல், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
- தொடர் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது
- மாவட்ட பொதுச் செயலாளர் மடத்தனூர் ஆறுமுகம் வரவேற்றார்.
கிருஷ்ணகிரி,
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாரின் ஆலோசனைபடி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் தொடர் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது தொடர்ந்து பெட்ரோல், டிசல், சமையல் எரிவாவுகளின் விலையை உயர்த்தியும், பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தரைவார்பதும், நாட்டு மக்களின் வரிபணத்தினை அப்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கி நாட்டு மக்களை வஞ்சித்து வரும் மோடியின் அராஜகத்தினை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்கள்.
தொடர்ந்து 9 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் மோடிக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என வழியுறுத்தப்பட்டது.
போச்சம்பள்ளி ராஜுவ் காந்தி சிலை முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராசன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருலாளர் உமர் பாஷா, வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மடத்தனூர் ஆறுமுகம் வரவேற்றார்.
இந்த கண்டன ஆப்பாட்டத்தின் போது மாவட்டத்துணைத் தலைவர் விவேகாநந்தன், மாவட்ட பொது செயலாளர் ஹரிகரன், சேவாதளமாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர்கள், மாது, தனஞ்செயன், திருமால், கிருஷ்ணன், அயோத்தி, ஜிவானந்தம், நகரத் தலைவர்கள், யுவராஜ், முபாரக், லலித் ஆண்டனி, தேவநாரயணன், விஜயகுமார், கார்த்திக், முனுசாமி மற்றும் ஆடிட்டர் வடிவேல், ஜெவேல், மின்டிகிரி முனுசாமி நாயுடு, மாவட்ட செயலாளர்கள் வேடியப்பன், நாகராஜ், நவாப், முன்னால் தலைவர் விஜியன், அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், சர்தார், அன்பரசன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்ட முடிவில் மாவட்டத் துணைத்தலைவர் சாந்தசீலன் நன்றியுரை ஆற்றினார்.
- கடந்த 6-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் எழத்தக்கிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 6-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் கிருஷ்ணகிரி லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி செண்பகம் (வயது19
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






