என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

     போச்சம்பள்ளியில் காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • தொடர் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது
    • மாவட்ட பொதுச் செயலாளர் மடத்தனூர் ஆறுமுகம் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமாரின் ஆலோசனைபடி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் தொடர் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது தொடர்ந்து பெட்ரோல், டிசல், சமையல் எரிவாவுகளின் விலையை உயர்த்தியும், பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தரைவார்பதும், நாட்டு மக்களின் வரிபணத்தினை அப்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கி நாட்டு மக்களை வஞ்சித்து வரும் மோடியின் அராஜகத்தினை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்கள்.

    தொடர்ந்து 9 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் மோடிக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என வழியுறுத்தப்பட்டது.

    போச்சம்பள்ளி ராஜுவ் காந்தி சிலை முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராசன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருலாளர் உமர் பாஷா, வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மடத்தனூர் ஆறுமுகம் வரவேற்றார்.

    இந்த கண்டன ஆப்பாட்டத்தின் போது மாவட்டத்துணைத் தலைவர் விவேகாநந்தன், மாவட்ட பொது செயலாளர் ஹரிகரன், சேவாதளமாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர்கள், மாது, தனஞ்செயன், திருமால், கிருஷ்ணன், அயோத்தி, ஜிவானந்தம், நகரத் தலைவர்கள், யுவராஜ், முபாரக், லலித் ஆண்டனி, தேவநாரயணன், விஜயகுமார், கார்த்திக், முனுசாமி மற்றும் ஆடிட்டர் வடிவேல், ஜெவேல், மின்டிகிரி முனுசாமி நாயுடு, மாவட்ட செயலாளர்கள் வேடியப்பன், நாகராஜ், நவாப், முன்னால் தலைவர் விஜியன், அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், சர்தார், அன்பரசன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

    கூட்ட முடிவில் மாவட்டத் துணைத்தலைவர் சாந்தசீலன் நன்றியுரை ஆற்றினார்.

    Next Story
    ×