என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது.
    • சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் முன்பு பா.ஜ.க. எஸ்.டி. அணி சார்பில்யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திப்பன் வரவேற்றார். இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன், எஸ்.டி. அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், எஸ்.டி. அணியின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் வாழும் விவசாயிகள் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

    விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது. அதேபோல யானைகளால் தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலை வர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், ஆனந்த், நகர தலைவர் வெங்கட்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.
    • தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில் இருந்து முதன்முறையாக வருகிற 17-ந்தேதி முதல், தினசரி திருமலை திருப்பதிக்கு ஆன்மிக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் எளிதில் சென்று வர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒசூர் மேலாளரும், ஓசூர் ஹோட்டல் தமிழ்நாடு மேலாளருமான வசந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தினசரி ஆன்மிக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துறை ராமசந்திரன் வழிகாட்டுதலின்படி அறநிலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன்,

    நிர்வாகி இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோரின் உத்தரவின் பேரில், ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.

    ஒசூரில் இருந்து திருமலை திருப்பதிக்கு அழைத்துச்சென்று

    வர சொகுசுப் பேருந்து பயணம், சாமியை தரிசனம் செய்ய கட்டணம், உணவு என இதற்கான கட்டணமாக தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    முதல் நாள் இரவு ஓசூரிலிருந்துகிளம்பும் பேருந்து, விடியற்காலை 4 மணியளவில் கீழ் திருப்பதியில் உள்ள ஒட்டலுக்கு சென்றடையும்.

    அங்கு காலை சிற்றுண்டி முடித்து, திருச்சானூர் அலமேலு மங்கம்மாபுரத்தை தரிசித்த பின் மலையில் உள்ள ஏழுமலையானை தரிசித்து மீண்டும் இரவு 11 மணியளவில் ஓசூருக்கு வந்தடையும்.

    இந்த தினசரி ஆன்மிக பயணம் குறித்து அறிய, ஓசூர் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அலுவலக எண் 7845835847 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது நேரில்வந்தோ தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியை, ஓசூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, மேலாளர் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தங்கள் பகுதியில் போதிய சாலை வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
    • சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா வேப்பன ஹள்ளி தொகுதி மேலுமலை ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கள் பகுதியில் போதிய சாலை வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து அந்த கோரிக்கையை சேர்மன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை ஆகியற்றை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

    அதனடிப்படையில் சாமல்பள்ளம் கிராமத்தில் இருந்து சீக்கலபள்ளி செல்லும் சாலையின் மெடிக்கல் முதல் விஜயன் வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்க சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், மேலுமலை கிராமத்தில் சந்திரன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிெமண்ட் சாலையும்,

    ஆண்டியப்பன் கோட்டை கிராமத்தில் முனிப்பா வீடு முதல் கோவில் வரை சுமார் ரூ.5 லட்சம் மதீப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்துநிதி ஒதுக்கப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் சேட்டு தலைமையில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அப்பகுதி மக்கள் அனைவரும் நன்றியினையும் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் வெங்கடேசன், முன்னால்கவுன்சிலல் லோகேஷ், வார்டு உறுப்பினர் மாதம்மாள், விஜியன், ஊர் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.

    • 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.
    • மங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    ஓசூர்,

    ஒசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தம்ப்ராஸ்) கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், உலக மக்கள் நலனுக்காக 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.

    ஓசூர் பழைய ஏ.எஸ் டி..சி.பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சுதா நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    மேலும் இதில், மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராகவன், ரோகினி கணேஷ், நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜே பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 23 துணை தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, பர்கூர் துணை தாசில்தார் (தேர்தல்) செல்வராஜ், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்லா பகஷ் பாஷா, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், தலைமை உதவியாளர் (க்யூ பிரிவு), கூடுதல் பொறுப்பு (தலைமை உதவியாளர் ஜி பிரிவு) ஆகவும், அஞ்செட்டி துணை தாசில்தார் (தேர்தல்) கணேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜே பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராகவும் (சுத்த நகல் பிரிவு), ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் பிரிவு சுபாஷினி, தேன்கனிக்கோட்டை துணை தாசில்தாராகவும் (தேர்தல்), தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், கிருஷ்ணகிரி துணை தாசில்தாராகவும் (முத்திரைத்தாள்), ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயராமன், ஊத்தங்கரை மண்டல துணை தாசில்தாராகவும் -2 (சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போச்சம்பள்ளி துணை தாசில்தார் (தேர்தல்) முருகன், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஐ பிரிவு) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளர் (சுத்த நகல் பிரிவு) அமுதா, மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (கனிமம்) சுரேந்திரன், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலராகவும், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயன், மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (கனிமம்), ஓசூர் துணை தாசில்தார் வெற்றிவேல், ஓசூர் துணை தாசில்தாராகவம் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இ பிரிவு பாரதி, போச்சம்பள்ளி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஐ பிரிவு) சகாதேவன், போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தாரகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பி பிரிவு ஜெயபால், ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அஞ்செட்டி மண்டல துணை தாசில்தார் சந்திரன், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) மணிகண்டன், அஞ்செட்டி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசன், பர்கூர் துணை தாசில்தாராகவும் (தேர்தல்), சூளகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் சகுந்தலா, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (இ பிரிவு), சூளகிரி துணை தாசில்தார் (தேர்தல்) அருள்மொழி, சூளகிரி தலைமையிடத்து தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராஜாக்கண்ணு, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஆர் பிரிவு) அரவிந்த், கலெக்டர் அலுவலக துலைமை உதவியாளராகவும் ( பி பிரிவு), ஓசூர் துணை தாசில்தார் -1 செட்டில்மெண்ட் ஆனந்த், ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் ஆகவும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார்.

    • மக்களுக்கான திட்டங்களை வழங்கும் அவருக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நகர தி.மு.க., சார்பில், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 -வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    இதற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.

    தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் 70 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி சிறப்புரையாற்றினார்.

    இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், சேலை, பாத்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் ஆட்சியில் பதவி ஏற்ற போது கொரோனா அதிகமாக இருந்தது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். மக்களுக்காக இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்தார்.

    பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் சிறப்பான ஒரு ஆட்சியை தந்து வருகிறார். மக்களுக்கான திட்டங்களை வழங்கும் அவருக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்ழுழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, அறிஞர், பேரூர் செயலாளர் பாபு, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இப்பதவிக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடைபெறவுள்ளது.
    • தகுதிக்கேற்ப ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்த ப்படுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தாட்கோ மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11 ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளது.

    இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடைபெறவுள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்த ப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார்.
    • இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 28-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவின் போது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் முன்னாள் அமைச்சர் வீரமணி தங்க நாணயங்களை வழங்கினார்.

    முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், வேளாங்கண்ணி அகாடெமியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தம்பிதுரை எம்.பி., தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

    இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மேலும் ஆவின் முன்னாள் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சிட்டி ஜெகதீசன், வக்கீல் அசோகன், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழுமப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இன்ஜினியர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜலஜாக்ஸி நன்றி கூறினார். 

    • பெற்றோரை இழந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.
    • மொத்தம் ரூ.94.94 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுளளது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சுயசார்புடையவர்களாக செய்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களின் வாழவில் மற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும், ஏழை, எளிய மாணவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

    இது குறித்து ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் கூறுகையில், ஐவிடிபியின் கல்வி பணிகளில் முதன்மையானது பெற்றோரை இழந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.

    அதன்படி பெற்றோரை இருவரையும் இழந்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஒருவரை இழந்த மாணவர்களுக்கு ரூ.7,500 என வழங்கி வருவதுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு கல்வி உதவித்தொகையாக ரூ.7,500 வழங்கி வருகிறோம்.

    அதன்படி, இந்த கல்வியாண்டில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.60 லட்சம், திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம், ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.14.60 லட்சம், கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு ரூ.1.10 லட்சம், வேலூர் அக்சீலியம் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம், வேட்டவலம் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.52 லட்சம், மெட்டாலா லயோலா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சம், கீரனூர் தொன் போஸ்கோ இளைஞர் கிராம மாணவர்களுக்கு ரூ.4 லட்சம், பர்கூர் செயின்ட் ஜோசப் உடல் மற்றும் சமூக நல மைய மாணவர்களுக்கு ரூ.3.60 லட்சம், எலத்தகிரி கொன்சாகா கல்லூரி மாணவிகளுக்கு ரூ.4.80 லட்சம், தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.8.90 லட்சம், ஏலகிரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.42 லட்சம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.60 லட்சம், சேலம் பாகல்பட்டி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்க ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.94.94 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுளளது. இந்த கல்வி உதவித்தொகையைப் பயன்படுத்தி மாணவர்கள் உயர் கல்வியை சிறப்புடன் முடித்து, பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மேலும், இக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3.96 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய பகுதி கிராம பகுதிகளில் அதில்பேரிகை, அத்தி முகம், காமன் தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், காட்டு நாயக்கன தொட்டி, உலகம், மேலுமலை, காளிங்காவரம், உத்தனப்பள்ளி, மேடுபள்ளி, கொல்லப்பள்ளி, கும்பளம், மற்றும் பல பகுதிகளில் கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.

    • குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கதவுகள் போடப்பட்டு இருந்தாலும், அவற்றை உடைத்து உள்ளே புகுந்து எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
    • கிராமத்தில் உள்ள குரங்குகளைக் கூண்டு வைத்து பிடித்து தொகரப்பள்ளி அல்லது செங்கம் காட்டில் விட கோரிக்கை விடுத்துள்ளனா்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சில குரங்குகள் தஞ்சமடைந்த ன. தற்போது அந்த மரத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

    இந்த குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள் மற்றும் துணி மணிகள், புத்தகங்கள் உள்ளிடவற்றை எடுத்து சென்றுவிடுகின்றன. குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கதவுகள் போடப்பட்டு இருந்தாலும், அவற்றை உடைத்து உள்ளே புகுந்து எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், மேலும் கிராமத்தில் உள்ள குரங்குகளைக் கூண்டு வைத்து பிடித்து தொகரப்பள்ளி அல்லது செங்கம் காட்டில் விட கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • நல திட்ட உதவிகள், ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மத்தூர் வடக்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் குண.வசந்தரசு தலைமை தாங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி எம்.பள்ளத்தூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நல திட்ட உதவிகள், ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் வடக்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் குண.வசந்தரசு தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து தூய்மை பணியளர்களை கெளரவித்து நல திட்ட உதவிகள் வழங்கி , ஆடவர் கைப்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில விவசாய அணி துணை தலைவர் டேம் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், ஒன்றியத் துணை செயலாளர் ஜீவானந்தம். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி கதிர்வேல், செந்தாமரை சுப்பன், பூபதி ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், பால்மூர்த்தி கிளை செயலாளர்கள் வஜ்ஜிரவேல், அப்பாவு, கிளைபிரதிநிதி ஆசைத்தம்பி, வார்டு உறுப்பினர்கள் மாதவன், தமிழரசன், வேலு, அசோக்குமார், லிங்கேஸ்வரன், அன்பரசன். விவேகானந்தன், மாதவன் உள்பட ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×